ஆழ்மனதில் இருப்பவை, ஏதாவதொரு விதத்தில், கசிந்து வெளியாகிக் கொண்டே இருக்குமாகையால், மனிதப் பிறவிகளால் இரகசியமாக இயங்க முடியாது.
காதலுக்கும் இது பொருந்தும்.
தாயிடமிருந்து குழந்தை அன்னியப் பட்டால், தாயை விட நெருக்கமான ஒரு உறவு, உருவாகி விட்டதாகப் பொருள்.
வீட்டுக்குள் வந்ததும், தன் அறைக்குள் சென்று தாளிட்டுக் கொண்டால், வீட்டுக்கு வந்து விட்டதைத் தெரிவிக்கும் சாக்கில், தன் இணை வீட்டைச் சென்றடைந்து விட்டதா? வேறெங்கும் ஊர் சுற்றிக் கொண்டிருக்கிறதா? என வேவு பார்க்கப் போன் செய்கிறார்கள் என்று பொருள். அந்த உரையாடல் அரை மணி நேரமாவது நடைபெறும். அதை மறைக்கத் தாளிட்டுக் கொள்வார்கள்.
கதவைத் தட்டி அழைப்பவர் மீது கோபமுற்றால், காதல் துவங்கி விட்டது என்று பொருள். இணையுடன் கொஞ்சிக் கொண்டிருக்கும் போது, இடையூறு செய்தால் கோபம் வரும். சலித்துக் கொண்டே கதவைத் திறப்பார்கள்.

உடல்மொழியைக் கவனித்தால், குறிப்பாக முகத்தைக் கவனித்தால், எள்ளும் கொள்ளும் வெடித்துக் கொண்டிருக்கும். கதவைத் தட்டியது வேலைக்காரியாக இருந்தால், அந்த நபரின் மீது, அதீதமாகக் கோபப்படுவார்கள்.
வீட்டை விட்டு வெளியேறுவதில் மிகவும் ஆர்வமாக இருந்தால், காதல் துவங்கி விட்டது என்று பொருள். பத்து மணி நேர இடை வெளிக்குப் பின், ஜோடியைச் சந்திப்பது அதிக மகிழ்ச்சியைக் கொடுக்கக் கூடிய காரியம். அந்த மன மகிழ்ச்சி உடல்மொழி வழியே கசிந்து கொண்டிருக்கும்.

உரிய நேரத்தில் வீட்டுக்கு வராவிட்டால், நிச்சயமாக ஊர் சுற்றுகிறார்கள் என்று பொருள். காதல் வயப்பட்டிருக்கலாம். அல்லது அடுத்தவர் காதலுக்குக் காவலிருக்கலாம்.
பெற்றோரிடம் தன் செல்போனைத் தர மறுத்தால் இரகசியம் இருக்கிறது என்று பொருள்.
வீட்டுக்கு வந்தவுடனே, எதிர்ப்பாலினத்திடமிருந்து போன் வருமானால், வீடு வந்து சேர்ந்தாகி விட்டதா என்பதை உறுதிப் படுத்திக் கொள்ளும் அழைப்பாக இருக்கலாம்.
எனக்கு அண்ணா மாதிரி, அல்லது தங்கை மாதிரி என்று திடீரென ஒரு உறவு முளைப்பதே பெற்றோரை ஏமாற்ற அணியப் படும் முகமூடி. நம்ப வைத்துக் கழுத்தறுப்பதிலேயே இது தான் மிகவும் மலிவான வாக்குறுதி, அண்ணன் தங்கை உறவு, காதலில் தான் முடியும்.
வீட்டைத் தேடிப் பரிசுப் பொருட்கள் வந்து கொண்டிருந்தால், காதல் துவங்கி விட்டது என்று பொருள்.
இருசக்கர வாகனத்தின் மைலேஜ் மீட்டர் தாறுமாறாக ஓடிக் கொண்டிருந்தால், எதிர்ப் பாலினத்தோடு ஊர் சுற்றத் தொடங்கியாகிவிட்டது என்று பொருள்.

அடுத்தவர் மீது பாலியல் சார்ந்த குற்றச்சாட்டு கூறப் படுமானால், காதல் துவங்கி விட்டது. அது குறித்த சந்தேகம் எதுவும் பெற்றோரிடம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகத் தன்னை அப்பழுக்கற்ற நபராகக் காட்சிப் படுத்த மேற்கொள்ளும் மலிவான முயற்சி.
மிகை அலங்காரம் நிகழுமானால், காதல் இன்னும் கைகூட வில்லை. ஆனால், முயற்சி நடக்கிறது.
கைபேசிக் கட்டணம் அதிகரித்தால், காதல் துவங்கி விட்டது. ஆனால், இன்னும் உடலுறவு நிகழவில்லை.

கல்விச் செலவுக்கென அடிக்கடி பணம் கேட்கப் படுமானால், காதல் துவங்கி விட்டது. எதிர்ப்பாலின நபர் உங்கள் குழந்தையைத் திறமையாகக் கையாள்கிறார்.

கைபேசியின் வரலாறு (Call History) தொடர்ந்து அழைக்கப்பட்டு வருமானால், பல ஜோடிகள் உள்ளனர். கைபேசியின் குறுந்தகவல் (Inbox chats) பகுதி சுத்தமாக இருக்குமானால், பல ஜோடிகள் இருப்பதால், ஒருவரைப் பற்றி மற்றவருக்குத் தெரிந்து விடக்கூடாது என்பதற்காக அனைத்து தகவல்களும், அழிக்கப்பட்டு விடுகின்றன என்று பொருள்.
கணணியின் வலைத்தளத் தேடலின் வரலாறு (Web browsing history) அழிக்கப் படுமானால், இரகசியம் மறைக்கப் படுகின்றது என்று பொருள். அது ஆபாசப் படம் பார்த்ததாக இருக்கலாம்.
ஞாயிற்றுக்கிழமைகளில் தொலைதூரக் கோவிலுக்குச் செல்வது வழக்கமான காரியமானால், காதல் பக்தி முற்றி, விடுதிகளில் சாமியாட்டம் நடக்கின்றது என்று பொருள்.
திடீரென பக்தி முற்றி கோவில் கோவிலாகச் செல்லத் தொடங்கினால், வீட்டுக்குத் தெரியாமல் திருமணம் நடக்கப் போகிறது என்று பொருள்.

எந்தக் கோவிலில் கூட்டம் இருக்காது. எந்தக் கோவில் பாதுகாப்பானது என்பதை ஆராய்வதற்கான பயணமே பக்திப் பயணம்.
வீட்டுக்கே தெரியாமல், விடுப்பு எடுக்கப் பட்டிருந்தால், விடுதிகளில் விளையாடும் வேலை தொடங்கி விட்டது என்று பொருள்.
அடிக்கடி ஒரு நாள் சுற்றுலா செல்லத் தொடங்கினால், காதல் முற்றி களவொழுக்கம் தொடங்கி விட்டது என்று பொருள்.
பெண்ணின் உடல் பூரிப்பாக, இயற்கைக்கு மாறான விதத்தில் மிளிருமானால், கருக்கலைப்பு வரை நிகழ்கிறது என்று பொருள்.
தேர்வுகளில் திடீரென மதிப்பெண் குறையுமானால், காதல் பக்கம் கவனம் திரும்பி விட்டது என்று பொருள்.
திடீரென மிகவும் சோர்வோடு காணப் பட்டால், காதல் இணையின் சித்திரவதைக்கு ஆளாகிக் கொண்டிருப்பதாகப் பொருள்.

உடலில் கீறல்கள் தெரிந்தால், சுயவதை என்று பொருள்.
எதிலுமே சிரத்தையின்றிக் காணப்பட்டால், பேச்சில் விரக்தி தெரிந்தால், காதல் தோல்வி என்று பொருள்.
எதிலுமே அக்கறையில்லாமல் நடைப்பிணம் போல் குழந்தை செயல்படத் தொடங்கினால், அவமானகரமான முறையில் காதலில் தோற்றுப் போயிற்று என்ற பொருள். இந்தச் சூழலில் பெற்றோரின் ஆதரவும் அரவணைப்பும் மிகவும் அவசியம்.
ஏனெனில், காதலில் படுதோல்வியடையும் குழந்தை தற்கொலை வரை செல்லக் கூடிய ஆபத்து உண்டு.
எச்சரிக்கை.
இவற்றையும், இவற்றைப் போன்ற உள்ளுணர்வால் மட்டுமே உணர முடிந்த இன்னபிற ஐயப்பாடுகளையும் கொண்டு, பதின்பருவக் குழந்தையின் அந்தரங்க உலகத்தைப் பற்றிப் பெற்றோர் அறிந்து கொள்ளலாம். அந்த அறிதலுக்கு ஏற்ப, எச்சரிக்கையோடு வாழக் கற்றுக் கொடுத்து விடலாம்.
மேலே சொல்லப்பட்டுள்ளவை அனைத்தும் நுறு சதவீதம் சரியாகவே இருக்கும் என்று சொல்லி விட முடியாது.
சொன்னது போல் இருக்கலாம். அல்லது அதைவிடத் தீவிரமாகவும் இருக்கலாம். அல்லது எதிராகவும் இருக்கலாம்.
ஆகவே, வேறு பல செயல்களையும் ஒன்றிணைத்துப் பார்த்தே உறுதிப் படுத்திக் கொள்ளவும்.
இந்த பகுதி 2k காதல் அறிவியல் எனும் நூலின் ஒரு பகுதி.

முழுதாய் படிக்க விரும்பினால்