Description
ஆன்மிக அறிவியல்
>> அஞ்சாதீர்கள்! <<
பசிக்கு அஞ்சாதீர்கள்…
நோய்க்கு அஞ்சாதீர்கள்…
வறுமைக்கு அஞ்சாதீர்கள்…
கர்ம வினைகளுக்கு அஞ்சாதீர்கள்…
அஞ்ஞானத்திற்கு அஞ்சாதீர்கள்…
மரணத்திற்கு அஞ்சாதீர்கள்…
அஞ்சாமல் எப்படி வாழ்வது?
இந்நூலின் வழியே நாம் வற்புறுத்துவது…
எம் தாய்த் தமிழ்மொழி வளர்ச்சியே வேண்டும்.
அந்நிய ஆங்கில மொழி ஆதிக்கம் வேண்டாம்.
எம் தமிழ்ப் பாரம்பரிய உணவுமுறையே போதும்…
அந்நிய உணவு முறையாகிய ‘KFC, Mc.Donalds, Pizza, Fast Foods…’ உள்ளிட்ட நச்சுப் பொருள்களின் ஆதிக்கம் வேண்டாம்.
எம் பாரம்பரிய இயற்கை மருத்துவம், நாட்டு மருத்துவம், சித்த மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம், ஓமியோபதி மருத்துவம், மருந்தில்லா மருத்துவ முறைகளே போதும்…
அந்நிய ஆங்கில மருத்துவ அதாவது ‘Allopathy’ ஆதிக்கம் வேண்டாம்.
அறிவுத்திறமை, தொழிற்பயிற்சி, உடல் நலம், ஆன்மீக ஒழுக்கத்துடன் கூடிய பாரம்பரியக் கல்விமுறையே வேண்டும்.
அந்நியர்க்கு அடிமையாக்கும் இன்றைய கல்வி முறை வேண்டாம்.
இரசாயன உரம், மருந்து, ‘Hybrid’ என்னும் மரபணுக் கலப்பு போன்றவை இல்லாத இயற்கை வேளாண்மை முறை மட்டுமே போதும்…
அந்நிய வேளாண்மை முறை வேண்டாம்.
எம் பாரம்பரிய வணிக, பொருளாதார முறைகளே போதும்…
அந்நிய வணிக, பொருளாதார ஆதிக்கம் வேண்டாம்.
எம் பாரம்பரிய நாகரீகம், பண்பாடு, சமயம் போன்றவற்றைப் பேணும் அரசியல் நெறிமுறையே வேண்டும்.
அந்நிய தேசங்களின் கைக்கூலிகளால் நடத்தப்பெறும் அரசியல் நெறிமுறை வேண்டாம்.
அற்புதமான தத்துவங்களுடன் பிறப்பில் தொடங்கி பிறப்பறுத்தல் வரை வழிகாட்டும் ஆதிசிவநெறியாம் சைவ சித்தாந்த, சித்தாந்த சைவ நெறியுடன் கூடிய சன்மார்க்க நெறி மட்டுமே போதும்.
பன்றிக்கறிக்கும் பசுமாட்டுக் கறிக்கும் அலையும் அந்நிய சமயங்களின் ஓட்டுறவு வேண்டவே வேண்டாம்.
1. உடல் நலம்…. உணவு முறை…. மருத்துவம்!
2. உலகின் முதன்மொழி தமிழ்!
3. கல்வி முறை
4. நேர்மையான வணிகம்…. தொழில்…. உண்மையான பொருளாதாரம்!
5. உண்மையான பொதுத் தொண்டு
6. நேர்மையான அரசியல்!
7. ஆன்மீகம், சமயம், திருமறைகள்…. யோகம், ஞானம்…. ஜெபம், தியானம், தவம், சமாதி!…
Reviews
There are no reviews yet.