Description
பிறப்பால் அல்லாமல், திட்டமிட்டு செல்வந்தராக உருவாக விரும்பும் ஒவ்வொருவருக்கும்.
வறுமை என்பது ஒரு நோய். பணமே இந்நோய்க்கான ஒரே மருந்து. மனமே மருந்தை உருவாக்கும் பட்டறை. எண்ணங்களே மருந்துக்கான மூலப் பொருட்கள். ஆகவே, எதைச் சிந்திக்க வேண்டும் என்று சிந்தித்துப் பார்த்த பின், எண்ணத் தொடங்குவதே, திட்டமிட்டுச் செல்வந்தராக உருவாவதற்கான அறிவியல் பூர்வ தொழில்நுட்ப இரகசியம்.
ஏதேனும் ஒன்றை அடைய வேண்டும் என்கிற விருப்பம் மட்டும் மனிதனிடம் இல்லா விட்டால், மனிதன் சோம்பேறியாகி, தனக்கு மட்டுமின்றி சமூகத்துக்கும் சுமையாகிப் போவான்.
அடைய வேண்டும் என்கிற விருப்பம் தான் செயல் படும் படி மனிதனை உந்தித் தள்ளும் விசை. இவ்விசை மட்டும் மனிதனிடம் இல்லாமல் இருந்திருந்தால் எந்தக் கண்டு பிடிப்புகளும் உலகில் நிகழ்ந்திருக்காது. எவ்வித முன்னேற்றமும் உலகில் ஏற்பட்டிருக்காது. காட்டுவாசியாகவே இப்போதும் நாம் வாழ்ந்து கொண்டிருப்போம்.
ஆகவே, உங்கள் விருப்பம் அனைவர் நெஞ்சிலும் இருக்கும் விருப்பமே. ஆனால், ஒவ்வொருவர் மனதிலும் இரகசியமாய் உறைந்து கொண்டிருக்கும் இந்த விருப்பம், அனைவர் வாழ்விலும் நிறைவேறி விடுகிறதா என்று பார்த்தால் அதிக பட்சமாய் ஐந்து சதவீத மக்களின் விருப்பம் மட்டுமே நிறைவேறுகிறது.
தொண்ணூற்றைந்து சதவீத மக்கள் ஏக்கம் தணியாத நிலையிலேயே வாழ்ந்து மடிகிறார்கள். காரணம், தங்கள் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ள அவர்களுக்குத் தெரியவில்லை.
ஆனால், உங்கள் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ள உங்களால் முடியும். ஏனெனில், நீங்கள் அந்த கலையைக் இன் நூலின் வாயிலாக கற்றுக் கொள்ளப் போகிறீர்கள்.
மேலும், உங்களிடம் தேடல் உள்ளது. எங்கே தேடல் உள்ளதோ அங்கே ஆற்றல் இருக்கும். மறைந்து கிடக்கும் ஆற்றலின் கசிவே தேடல். ஆகவே, உங்களுக்குள் அளவற்ற ஆற்றல் முடங்கிக் கிடக்கிறது. முடங்கிக் கிடப்பதை முறைப் படுத்தினால் போதும். நீங்கள் செல்வந்தராக உருவாகி விடுவீர்கள்.
செல்வந்தராக உருவாவது மிகவும் எளிது. சில நோய்களிலிருந்து மனதை மீட்டால் போதும். உங்கள் மனமே உங்களைச் செல்வந்தராக உருவாக்கி விடும். ஆகவே, மன நோய்களிலிருந்து மனதை மீட்கும் நுண்ணறிவை, செல்வந்தராக உருவாக்கக் கூடிய சிறப்பறிவை நிச்சயமாக இந்நூல் உங்களுக்கு வழங்கும் என்பது உறுதி உறுதி உறுதியிலும் உறுதி !!!
Reviews
There are no reviews yet.