fbpx
Course Content
Tantra Secrets
About Lesson

தணிக்கப் படாத காமத்தின் சீற்றங்கள்

 

விரோதிகள் இருவர் ஒன்றாக உறங்கிக் கொண்டிருக்கும், ஒரே இடம் குடும்பம்.

 

பாலின்பப் பஞ்சம் மிகவும் ஆபத்தானது.

 

காற்றும், நீரும், உணவும், உறக்கமும், பாலின்பமும் உயிரின் அடிப்படைத் தேவைகள். ஆழ் மனதால் நிர்வகிக்கப் படுகின்ற உணர்வுகள் இவை. உயிர் நலமாய் வாழத் தேவைப்படுகின்ற ஐம்பூதங்கள் இவை.

 

காற்றுக்குப் பஞ்சமில்லை. இயற்கையாகவே கிடைத்து விடுகிறது. சிறிய முயற்சியிலேயே தண்ணீர் கிடைத்து விடுகிறது. உழைத்தால் உணவு கிடைத்து விடும். உடல் அயர்ந்தால் உறக்கம் வந்து விடும். ஆனால், பாலின்பத்தைப் பெறுவதற்கு மட்டும் எதிர்ப் பாலின இணை தேவை.

 

தூய காற்று, தண்ணீர், உணவு மற்றும் உறக்கம் ஆகியவற்றின் பற்றாக் குறையால் ஏற்படும் பாதிப்புகள் கண்ணுக்குத் தெரியக் கூடியவை. உடனுக்குடன் மனித உடலைப் பாதிக்கக் கூடியவை. மனிதனின் செயல்பாட்டையே கூட முடக்கி விடக் கூடியவை. பிறருடைய பார்வையில் படாத படி, மனிதப் பிறவியால் மறைக்க முடியாதவை.

 

ஆனால், பாலின்பப் பஞ்சத்தால் ஏற்படும் பாதிப்புகளோ கண்ணுக்குத் தெரியாதவை. மற்ற நான்கின் பயன் பாட்டைக் கூடப் பாதிக்கக் கூடியவை. மனிதனை மிருகமாகவே கூட மாற்றக் கூடிய வல்லமை படைத்தவை.

 

ஆகவே, உணவு, நீர், காற்று, உறக்கம் ஆகிய நான்கின் பற்றாக்குறையால் ஏற்படும் பாதிப்புக்களைக் காட்டிலும், பாலின்பப் பஞ்சத்தால் ஏற்படும் உளவியல் பாதிப்புகள் மிகவும் ஆபத்தானவை.

 

மனிதப் பிறவியின் உடலை விட, மனதைத் தான் பெருமளவில் பாதிக்கக் கூடியவை. அதனால், அந்த மனிதப் பிறவியின் சுற்றுப்புறத்திற்கும் கூட பெருமளவில் ஆபத்தை விளைவிக்கக் கூடியவை.

 

தனக்குத் தொடர்பே இல்லாத, யாரோ பெற்ற குழந்தைகளை, பள்ளிக்குச் செல்லும் இளஞ்சிறார்களைக் கடத்திச் சென்று, பாலியல் தாக்குதலுக்குப் பின், கால்வாயில் தள்ளிக் கொல்லுமளவிற்கு, கொடூரமான சிந்தனையை உருவாக்கக் கூடியது பாலின்பப் பஞ்சம்.

 

திருமணத்திற்கு முன்பே பாலுறவில் ஈடுபடுவதைத் தடுக்க முயற்சிக்கும் போது, விபச்சாரத்தில் ஈடுபடுத்த முயல்வதாகத் தன் தாயின் மீதும், பாலியல் வன்கொடுமையில் ஈடுபட முயல்வதாகத் தன் தந்தையின் மீதும் கூசாமற் பொய் சொல்ல வைத்து, பெண்ணை ஓடிப் போகச் செய்யும் வல்லமை படைத்தது பாலின்பப் பஞ்சம்.

 

காம உணர்விற்கு வேறொரு சிறப்பும் உண்டு. பசி, தாகம், உறக்கம் ஆகியவற்றை தணிக்க உதவியவர்களை விட, காம உணர்வைத் தணிக்க உதவிய நபருக்குத் தான் மனம் முதலிடம் கொடுக்கும்.

 

பெற்றோர், உடன் பிறந்தோர், மற்றும் நண்பர்கள் எல்லாம் காமத்தைத் தணிக்க உதவிய நபருக்கு இணையானவர்கள் அல்ல.

 

பாலின்பப் பஞ்சத்தால் பாதிக்கப் பட்டுள்ள மனிதப் பிறவியை எளிதில் கண்டு பிடிக்க முடியாது. ஆரோக்யமான மனிதப் பிறவியைப் போன்றே பிறருடைய கண்களுக்குக் காட்சிப் படுத்தக் கூடிய அளவிற்கு, மறைந்துறையும் இயல்புடையது பாலின்பப் பஞ்சம்.

 

இந்தப் பூனையும் பாலைக் குடிக்குமா என்கிற பழமொழி பாலின்பப் பஞ்சத்தால் பாதிக்கப் பட்டுள்ள மனிதர்களுக்கு மிகச் சரியாகப் பொருந்தும்.

 

சுய இன்பத்தால் ஆன்மா முழு இன்பத்தைப் பெறுவதில்லை. ஆகவே, அது பாலின்பத்திற்கான நிரந்தரத் தீர்வாவதில்லை. அதனால், இரு பாலினத்திற்கும் எப்போதுமே எதிர்ப் பாலின இணை தேவை. இந்த நெருக்கடிக்கான நிரந்தரத் தீர்வாகவே குடும்பம் கண்டு பிடிக்கப்பட்டது.

 

உணர்வுகளும், உணர்ச்சிகளும்.

 

பசி, தாகம், உறக்கம், காமம் போன்றவை உணர்வுகள். உணர்வுகள் என்பவை உண்மையானவை. உயிரோடு இணைந்திருப்பவை.

 

மேற்கண்ட உணர்வுகளில் ஒன்றை இழந்தாலும், உயிரினங்கள் அழிந்து விடும். பூமியில் தொடர்ந்து தழைத்திருக்க முடியாது.

 

கோபம், பொறாமை, பயம், சோகம், வருத்தம், விரக்தி, துக்கம், கவலை, மகிழ்ச்சி, குதூகலம், ஆனந்தம், போன்றவை உணர்ச்சிகள். இவை பொய்யானவை. ஆனால், இவை தான் மனிதர்களிடையே பிரச்சினைகளை உருவாக்கக் கூடியவை.

 

உடலில் உருவாகக் கூடியவை உணர்வுகள். அகத்தில் உருவாகக் கூடியவை உணர்ச்சிகள். உடற் தேவைகள் உண்மையானவை. அகத் தேவைகள் மாயை. அதாவது உணர்வுகளின் எழுச்சி மற்றும் தணிப்பிற்கேற்ப உருவாகக் கூடியவை தான் உணர்ச்சிகள்.

 

அதாவது, உணர்வுகள் தணிக்கப்படாத போது கோபம், பொறாமை, பயம், சோகம், வருத்தம், விரக்தி, துக்கம், கவலை போன்ற உணர்ச்சிகள் உருவாகும்.

 

உணர்வுகள் தணிக்கப்படும் போது, மேற்கண்ட உணர்ச்சிகள் காணாமற் போய், மகிழ்ச்சி, குதூகலம், ஆனந்தம், உற்சாகம், போன்ற உணர்ச்சிகள் பிறக்கும்.

 

ஆகவே உணர்ச்சிகள் அனைத்துமே மாயை.

 

உணர்வுகளைப் பேணுவதன் அடிப்படையில் உருவாகக் கூடியவை. அதாவது, உணர்வுகளின் குழந்தைகளே உணர்ச்சிகள்.

 

காமம் என்கிற உணர்வு தணிக்கப்படாத போது, கோபம், எரிச்சல், வருத்தம், ஏமாற்றம், விரக்தி, வெறுப்பு போன்ற உணர்ச்சிகள் பிறக்கின்றன.

 

அதே காமம் என்கிற உணர்வு தணிக்கப்படும் போது, அன்பு, இரக்கம், மகிழ்ச்சி, ஆனந்தம், உற்சாகம், போன்ற உணர்ச்சிகள் பிறக்கின்றன.

 

அதேபோல பசி என்கிற உணர்வு தணிக்கப் படாத போது, மோசமான உணர்ச்சிகளும், பசி தணிக்கப்படும் போது நல்ல உணர்ச்சிகளும் பிறக்கின்றன.

 

அதே போலத் தான் உறக்கம் என்கிற உணர்வு தணிக்கப் படாத போது, மோசமான உணர்ச்சிகளும், அதே உறக்கம் என்கிற உணர்வு தணிக்கப்படும் போது நல்ல உணர்ச்சிகளும் பிறக்கின்றன.

 

தணிக்கப் படாத காமம் தான் மோசமான உணர்ச்சிகளை உருவாக்கும் வார்ப்புக் கூடம். மோசமான உணர்ச்சிகளே நோய்களை உண்டாக்கும் வேதிகளை உடலில் சுரக்கச் செய்பவை. ஆகவே, தணிக்கப்படாத காமம் உயிர்க்கொல்லி நோய்களைக் கூட, உருவாக்கக் கூடியது.

 

இந்த தகவல்களை யாரேனும் மறுக்கலாம். எதிர்வாதம் செய்யலாம். ஆனால் அவற்றின் மூலம் தன் மனம் பக்குவப் படுத்தப் பட்டுள்ள விதத்தைக் காட்சிப் படுத்தலாமே தவிர, உண்மையைக் கொல்ல முடியாது.

 

பேருண்மைகள் ஒரு போதும் சாவதில்லை. மேலும் காமம் மிகவும் சக்தி வாய்ந்த உணர்வு என்பதை நிரூபிக்க எந்த ஆதாரங்களும் தேவையில்லை. அவரவர் வாழ்விலிருந்தே தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம். அதன் உண்மையான தன்மையைப் புரிந்து கொள்ளலாம்.

 

உணர்வுகளின் அடிமை தான் அறிவு!

 

மனித உடலில் இயற்கையாக உருவாகக் கூடிய உணர்வுகள் மூன்று. பசியுணர்வு. உறக்க உணர்வு. பாலுணர்வு. இந்த மூன்று உணர்வுகளையும், உருவாகாமல் தடுக்க யாராலும் முடியாது. ஏனெனில், மரபணு மூலம் உயிரினம் பெற்றுள்ள உணர்வுகள் இவை.

 

மரபணு மூலம் பெற்றுள்ள ஒரு அறிவையோ, புலனையோ, உணர்வையோ எந்த உயிரினத்தாலும் கொல்ல முடியாது. பயிற்றுவிப்பதன் மூலம், கொஞ்சம் மட்டுப் படுத்தலாம். வேகத்தைக் கட்டுப் படுத்தலாம். முறைப்படுத்தலாமே தவிர, உருவாகவே முடியாத அளவிற்கு அழிக்க முடியாது.

 

ஆகவே மேற்கண்ட பசி, உறக்கம் மற்றும் காமம் ஆகிய மூன்றும் உடலின் உணர்வுகள். உயிரின் உணர்வுகள். இந்த மூன்று உணர்வுகளில் ஏதேனும் ஒரு உணர்வை இழந்து விட்டாலும், அந்த உயிரினம் இந்த பூமியில் தொடர்ந்து தழைத்த்திருக்க முடியாது. அழிந்து போய் விடும்.

 

மேலும், இந்த மூன்று உணர்வுகளும் ஒன்றுடன் ஒன்று பிணைந்திருப்பவை. ஒன்றையொன்று பாதிக்கக் கூடியவை. அதாவது ஆகாரம் இல்லாத போது, உறக்கம் வராது. அதேபோல பாலுணர்வும் கிளர்ந்தெழாது.

 

உதாரணமாக ஒரு நபரை இரண்டு மூன்று தினங்களுக்கு உணவே தராமல் ஒரு அறைக்குள் அடைத்து வைத்திருந்து, மூன்றாம் நாள் முடிவில் பேரழகியின் கையில் உண்வைக் கொடுத்து, அவனது அறைக்குள் அனுப்பினால், அவன் முதலில் உணவைத் தான் தீண்டுவான். அந்தப் பேரழகியை ஏறெடுத்துக் கூடப் பார்க்க மாட்டான். அங்கே உணவிற்கே முதலிடம். அதாவது, பசியுணர்வின் முன் அனைத்து உணர்வுகளும் காணாமல் போய்விடும்.

 

அதே போல, உறக்கம் இல்லாத போது பசியெடுக்காது. உடலின் வெப்பம் அதிகரித்து விடும். அதனால் சாப்பிட முடியாது. பாலுணர்வும் தலையெடுக்காது.

 

முன்பு செய்ததைப் போலவே, ஒரு நபரை இரண்டு மூன்று தினங்களுக்கு உறங்கவே விடாமல் காவலிருந்து, மூன்றாம் நாள் முடிவில், ஒரு பேரழகியை அவனது அறைக்குள் தள்ளிவிட்டு, அந்த அறையை வெளிப்புறத்தில் பூட்டிக் கொண்டாலும், அவனால் அந்தப் பேரழகியை ஏறெடுத்துக் கூடப் பார்க்க முடியாது.

 

ஏறெடுத்தே பார்த்து விட்டாலும், நிச்சயமாக அவளைத் தீண்ட முடியாது. தன் ஆடைகளை அவள் களைவதற்குள், அவன் உறங்கிப் போய் விடுவான். அவ்வாறு உறங்கியவனை எவ்வளவு தான் முயற்சித்தாலும், அந்தப் பேரழகியால் எழுப்ப முடியாது. உறக்கத்திற்கே அங்கே முதலிடம்.

 

அதேபோல பாலுணர்வு தணிக்கப் படாமல் இருக்கும் போது, உணவு வாய்க்குப் பிடிக்காது. விருந்து கூட மருந்தாய் இருக்கும். பால் புளிக்கும். தேன் கசக்கும். பழம் கூட சுடும். உறக்கமும் வராது. பஞ்சு மெத்தை கூட முள்ளாய்க் குத்தும். பச்சை நீரில் மூழ்கி எழுந்தாலும் காமத்தீயால் காந்தலேறி, உடல் தணலாய்த் தகிக்கும்.

 

உறங்க வேண்டுமே என்பதற்காக, புரியாத இலக்கண நூல் ஒன்றை எடுத்து வைத்துக் கொண்டு படித்தாலும், அந்த இலக்கணம் வேண்டுமானாலும் புரியுமே தவிர, உறக்கம் மட்டும் வரவே வராது. நடுநிசியிலோ அல்லது பின்னிரவிலோ உறக்கம் வரலாம்.

 

இது போல இந்த மூன்று உணர்வுகளும் ஒன்றையொன்று பாதிக்கக் கூடியவை. ஒன்றுடன் ஒன்று பிணைந்திருப்பவை. இந்த மூன்று உணர்வுகள் தான் ஒவ்வொரு நபரையும் வழி நடத்தக் கூடியவை. வாழ்க்கையை வடிவமைக்கக் கூடியவை. எதிர் காலத்தை நிர்ணயிக்கக் கூடியவை. தலை விதியைத் தீர்மானிக்கக்கூடியவை.

 

என்ன இது? அறிவல்லவா ஒரு நபரை வழி நடத்தக் கூடியது. வாழ்க்கையை வடிவமைக்கக் கூடியது. எதிர் காலத்தை நிர்ணயிக்கக் கூடியது. தலை விதியைத் தீர்மானிக்கக் கூடியது. என்கிற கேள்வி சிலருக்கு எழலாம். அது சரி தான்.

 

அறிவு தான் மேற்கண்ட அனைத்தையும் செய்கிறது. அதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், அந்த அறிவையே மேற்கண்ட மூன்று உணர்வுகள் தான் வழிநடத்திக் கொண்டிருக்கின்றன. இயக்கிக் கொண்டிருக்கின்றன. அறிவு என்பது பசி, உறக்கம் காமம் ஆகிய மூன்று உணர்வுகளின் அடியாள். இந்த மூன்று உணர்வுகளின் கொத்தடிமை தான் மனிதனின் அறிவு.

 

தணிக்கப்படாத காமம் மூளையை மழுங்கடிக்கும்

 

உணர்வுகளின் கொத்தடிமை தான் அறிவு என்பதற்கான ஆதாரத்தைத் தேடி நாம் அலையத் தேவையில்லை. நம் சொந்த வாழ்க்கையிலிருந்தே தெரிந்து கொள்ளலாம். அதாவது ஏதேனுமொரு காரணத்தால், உரிய வேளயில் நாம் உணவருந்த முடியாமல் போன போது, நம் அறிவு மந்தமாகவோ, அல்லது சற்றே கோபமாகவோ செயல் பட்டிருக்கிறதா? இல்லையா?

 

அதே அறிவு நாம் வயிறார உணவருந்தி முடித்த பின், நம் வயிற்றுப் பசி அடங்கிய பின் அமைதியாக, சாந்தமாக தன் இயல்பான நிலையில் செயல்படத் தொடங்குகிறதல்லவா?

 

அதே போல், ஏதோ ஒரு காரணத்தால், சில தினங்கள் சரியாக உறங்க முடியாமல் போன போது, நம் அறிவு சற்றே மந்தமானதாக, சோம்பலுடையதாக, முடிவெடுக்கத் தெரியாமல் தடுமாறுவதாக, சில சமயங்களில் தவறாகவே முடிவெடுத்து விடக் கூடியதாக செயல்படுகிறதா? இல்லையா? அதே அறிவு தான், ஆழ்ந்த உறக்கத்திற்குப் பிறகு, அமைதியானதாக, சாந்தமானதாக, கூடுதலான புத்துணர்வோடு செயல்படத் தொடங்குகிறதல்லவா?

 

அதே போல், பாலுணர்வு முழுமையாகத் தணிக்கப் பட்டிருக்கும் போது, நம் அறிவானது அன்புடையதாக, சாந்தமானதாக, மகிழ்ச்சி நிரம்பியதாக, ஊக்கமும் உற்சாகமும் கொண்டதாக, சற்று கூடுதலான ஈகையும் இரக்கமும் கூட கொண்டதாக செயல் படுகிறதா? இல்லையா?

 

அதே பாலுணர்வு தணிக்கப்படாத போது, அல்லது நம் காமத்திற்குரிய தீனி கிடைக்காத போது, குறிப்பாக காமத்திற்குரிய தீனி குடும்ப வாழ்க்கையில் மறுக்கப் படுகிற போது, அதே அறிவு சற்று ஆத்திரமுடையதாக, கூடுதலான கோபமுடையதாக, வம்புச் சண்டையிடுவதாக, ஒத்துழைக்க மறுப்பதாக, மற்றும் முரட்டுத்தனம் கொண்டதாக செயல் படுகிறதா? இல்லையா?

 

இவ்வாறாக, அறிவை உணர்வுகள் தான் வழி நடத்திக் கொண்டிருக்கின்றன. இந்தத் தெளிவான புரிதலே தீர்விற்கான சரியான பாதை. உணர்ச்சிகள் அனைத்தும் உணர்வுகளின் குழந்தைகள் என்கிற எளிய உண்மையைப் புரிந்து கொண்டாலே, குடும்ப வாழ்க்கையில் நிலவும் பல பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைத்து விடும்.

 

பாலின்ப ஆற்றமை நோயின் முகமூடிகள்

 

இல்லற வாழ்வில் தணிக்கப்படாத காமம், பாலின்ப ஆற்றாமை என்கிற மன நோயாக உருவெடுக்கிறது. அந்த மன நோய் கீழ்க்கண்ட வடிவங்களிலே குடும்ப வாழ்விலும், வெளியுலகத் தொடர்புகளிலும் வெளிப்படுகிறது.

 

வார்த்தைகளில் வெளிப்படும் ஆத்திரம், கோபம், குரோதம், பழியுணர்ச்சி, பகை, பொறாமை, கழிவிரக்கம், மனச்சோர்வு, சோம்பேறித்தனம், பணியில் சிரத்தையின்மை, கவனக் குறைவு, ஊக்கமின்மை, உற்சாகமற்ற மனநிலை,

 

தெளிவற்ற சிந்தனை, மூளையின் மந்த நிலை, கணக்கிடுவதில் பிழை, தவறான மதிப்பீடு, தவறான தொழில் முதலீடு, பேராசை, எதிர்மறைச் சிந்தனை, சிடு சிடுப்பு, பரஸ்பர குற்றச் சாட்டுக்கள்.

 

வாக்கு வாதங்கள், தர்க்கம், காண்கின்ற அனைத்திலும் குறைகளை மட்டுமே காணும் போக்கு, பிறரை அவமதித்தல், வம்புச் சண்டையிடுவதில் ஆர்வம், தொலைக்காட்சிக்கு அடிமையாய் இருத்தல்,

 

வாகனத்தை இயக்குவதில் காட்டப்படும் மூர்க்கத்தனம், பொருட்களை உடைத்தல், தூக்கமின்மை, மோசமான குழந்தை வளர்ப்பு, குழந்தையின் மீது காட்டப்படும் கோபம், ஏவப்படும் வன்முறை, குடும்ப வாழ்வில் நிகழும் வன் பாலுறவு, பிறன் மனை நோக்கல், கள்ளக் காதல், அபலைப் பெண்களின் மீது நடத்தப்படும் பாலியல் வன்முறை, பாலியல் ரீதியான பண்பாடற்ற பார்வை, இரு பொருள் கொண்ட உரையாடல்,

 

அலுவலகத்தில் இழைக்கப்படும் பாலியல் தொல்லைகள், பாலியல் ரீதியான விமர்சனங்கள், பாலியல் அடிப்படையிலான குற்றச்சாட்டுக்கள், விவாகரத்து, கொலை என அனைத்தும் தணிக்கப்படாத காமம் அணிகின்ற முகமூடிகள். பாலின்ப ஆற்றாமை என்கின்ற மன நோயின் பாதிப்புகள்.

 

மனைவியின் நடவடிக்கைகளில் காணப்படுகின்ற கணவனை நச்சரித்தல், கணவனிடமும் குழந்தையிடமும் காட்டப் படும் சிடுசிடுப்பு, முன் கோபம், கணவனையும், கணவனின் உறவுகளையும் எடுத் தெரிந்து பேசுதல், கணவனின் உறவுகளை அவமதித்தல், கணவனின் சிறிய தவறுகளையும் ஊதிப் பெருக்குதல், கணவனோடு வம்புச் சண்டையிடுதல், கணவனிடம் விட்டுக் கொடுத்துப் போகாமை,

 

எந்நேரமும் கணவனிடம் குறை கூறிக் கொண்டேயிருத்தல், கணவனின் செயல்கள் எதிலுமே திருப்தியின்மை, எடுத்ததற்கெல்லாம் கணவனிடம் எதிர்ப்பதமே சொல்தல், கணவனோடு வாக்கு வாதம் செய்தல், கணவனின் கேள்விகளுக்குக் குதர்க்கமாக பதிலளித்தல்,

 

வாகனம் ஓட்டும் போது அருகிலிருந்து வம்பிழுத்து ஆத்திர மூட்டுதல், கைபேசியில் வரும் கணவனின் அழைப்பை நிராகரித்தல், பிறருக்கெதிரில் பவ்யமாகவும் தனிமையில் பண்பற்றும் நடந்து கொள்தல், கண்டதை உண்டு உடலைப் பருமனாக்குதல், நோக்கமின்றிப் பேசுதல், கணவனைப் பொருட்படுத்தாமை,

 

எதற்கெடுத்தாலும் அழுதல், குடும்பத்தில் சர்வாதிகாரியாக நடந்து கொள்தல், குழந்தையிடம் காட்டப்படும் அரக்கத்தனம், தொலைக் காட்சிக்கோ, பக்திக்கோ அடிமையாகி விடுதல், மற்றும் பாலின்பத்தில் ஈடுபட மறுத்தல் போன்ற செயல்கள் அனைத்தும் பாலின்ப ஆற்றாமையின் வெளிப் பாடுகளே. மனைவியின் காமம் தணிக்கப் படாததால், அவளது ஆழ்மனதில் அவளுக்கே தெரியாமல் உருவாகியுள்ள மோசமான உணர்ச்சிகளே மேற்கண்டவாறு வெளிப்படுகிறது.

 

பாலின்ப ஆற்றாமையின் வெளிப்பாடுகள்.

 

தன் முன்னால் நீட்டப்படும் பிச்சைப் பாத்திரத்தில் ஒரு நபர் எதைப் போடுகிறார் என்பதற்குப் பின்னால் கூட அவருடைய காமம் மறைந்திருக்கிறது. தணிக்கப் பட்ட காமம், கருணையோடு அணுகச் சொல்லும். இயன்றதைப் போட வைக்கும். ஆனால், தணிக்கப் படாத காமமோ சீறி மட்டுமே விழச் செய்யும்.

வீட்டில் பிரச்சினை போலிருக்கிறது எனப் பிச்சைக்காரர்கள் முணு முணுத்த படி செல்வதிலிருந்தே இது ஊரறிந்த இரகசியம் என்பதை உணர்ந்து கொள்ளலாம்.

 

தன் அதிகாரத்தை ஒரு நபர் எவ்வாறு பயன்படுத்துகிறார் என்பதன் பின், அவருடைய காமத்தின் நிலைப்பாடு மறைந்திருக்கிறது. காமம் தணிக்கப்பட்ட நிலையில் இருந்தால், தன் கீழ் பணி புரிவோரின் மனிதத் தவறுகளை அவர் நயமாகச் சுட்டிக் காட்டுவார். காமம் தணிக்கப்படாத நிலையில் இருக்குமானால், சூழலுக்கேற்ப மிருகத்தனமாய் அவர் நடந்து கொள்வார்.

 

தொலைக் காட்சிகளில் ஒளிபரப்பாகும் விவாத நிகழ்ச்சிகளை கவனித்துப் பாருங்கள். யாருடைய காமம் தணிக்கப் பட்டிருக்கிறது. யாருடைய காமம் ஆவேசத்தில் இருக்கிறது என்பதை அவர்களுடைய உடல் மொழி மூலமாக வும், பயன்படுத்தும் வார்த்தைகள் மற்றும் கருத்துக்கள் மூலமாகவும் எளிதாகக் கண்டு பிடித்து விடலாம்.

 

ஏனெனில் அனைத்து உணர்வுகளுமே மனிதப் பிறவியின் ஒவ்வொரு செயலிலும் தங்களுடைய நிலையை, உணர்ச்சிகள் வடிவிலே கசிவுகளாகக் காட்சிப் படுத்திக் கொண்டேயிருக்கும். இதைத் தடுக்க முடியாது.

 

உதாரணமாக, அந்தக் கால அரசர்கள் நீதி வழுவாமல் ஆட்சி செய்ய வேண்டும். அரசரின் காமம் தணிக்கப்படாத நிலையில் இருந்தால் தவறான நீதியை, அல்லது தேவையை விடக் கூடுதலான தண்டனையை அவர் வழங்கி விடக் கூடும். ஆகவே அரசரின் காமம் முழுமையாகத் தணிக்கப்பட்டிருக்க வேண்டும் என்கிற பொது நல சிந்தனையின் காரணமாகவே அரசர்களின் அந்தப் புரங்கள் பல பேரழகியரால் அலங்கரிக்கப் பட்டிருந்தன என்று ஒரு ஞானி கூறுகிறார்.

 

ஒவ்வொரு மனித செயலிலும் காமம் கலந்திருக்கிறது.

 

இது போல் மனிதர்களின் ஒவ்வொரு செயலையும், அவர்களுக்கே தெரியாமல், தன்னுடைய நிலைப்பாட்டிற்கேற்ப, மோசமாகவோ, நல்ல வித மாகவோ பாதிக்கக் கூடிய ஒரு இயற்கையான உணர்வு தான் காமம் என்று உளவியலின் தந்தை கூறுகிறார்.

 

குழந்தைகள் அனைவரும் பிறவி மேதைகள். குழந்தைகளின் கற்றுக் கொள்ளும் வேகம் அபாரமானது. ஆனால், ஒரு சில குழந்தைகள் கல்வியில் மந்தமாக இருக்கின்றன. இந்த மந்த நிலைக்குப் பின்னால், அந்தக் குழந்தையின் பெற்றோருடைய தணிக்கப் படாத காமம் மறைந்திருக்கிறது.

 

தம்பதியரின் தணிக்கப் படாத காமம், காலையிலே சண்டையாக நடைபெறலாம். அது மௌணச் சண்டையாகக் கூட இருக்கலாம். அல்லது பள்ளிக்குச் செல்லத் துவங்கும் காலை நேரத்தில் காமத்தின் சீற்றத்தால் அரக்கத் தனமாக அந்தக் குழந்தை நடத்தப்படலாம். அதனால், குழந்தையின் மனம் உணர்ச்சி வயப்படுகிறது.

 

உணர்ச்சி வயப் படும் போது, குழந்தையின் மூளையிலே ஒரு வேதி சுரந்து விடுகிறது. அந்த வேதியுடனே குழந்தை பள்ளிக்குச் செல்கிறது. மற்ற குழந்தைகளைப் போன்றே, பாடங்களில் கவனம் செலுத்துகிறது. பாடங்களும் மூளையிலே பதிகின்றன.

 

ஆனால், அவை பதியும் போது காலையில் சுரந்த வேதிப் பொருளில் பதிகின்றன. மனநிலை இயல்பான நிலைக்குத் திரும்பும் போது அந்த வேதிப் பொருள் மறைந்து விடுகிறது. அவ்வாறு மறையும்போது அதில் பதிவான தகவல்கள் கழுவப் பட்டு விடுகின்றன.

 

இவ்வாறாக காலை நேர வகுப்புகளில் நடத்தப் படும் பாடங்களும், தன்னுடைய குடும்ப சூழல் குழந்தையின் நினைவில் வருகிற நேரத்தில் நடத்தப் படும் பாடங்களும் மூளையில் பதிவானாலும் அப் பதிவுகள் ஒரே நாளில் சுத்தமாகக் கழுவப் பட்டு விடுகின்றன. இவ்வாறாகத் தம்பதியரின் தணிக்கப் படாத காமம் குழந்தையின் கற்கும் திறனைக் கூட பாதிக்கின்றது.

 

ஆண்களிடமுள்ள குடிப்பழக்கத்திற்குக் காரணம் பாலின்பப் பஞ்சம். அதாவது, போதையற்ற நிலையில் மனைவியை மிரட்டிப் பணிய வைக்க அச்சப் படுகின்ற கணவன் குடித்து விட்டு வந்து பணிய வைக்க முயல்கிறான். பணிந்தால் பாலுறவு. இல்லையேல் தூக்கமாவது வருமே எனக் குடிக்கத் துவங்கி, இறுதியிலே மதுவின் அடிமையாகவே மாறிப்போகிறான்.

 

திருமணமான பத்தே வருடங்களில் ஒரு பெண் ஆயிரக் கணக்கான சேலைகளை வாங்கி விடுகிறாளே! அது வேறொன்றுமல்ல. அவளுடைய காமத்தைத் தணிக்க முடியாத கணவனால் தரப்படும் இழப்பீடு. பச்சையாகச் சொன்னால் கூலி.

 

திருமணத்தை, அங்கீகரிக்கப்பட்ட விபச்சாரமாக, அந்த சேலைகள் மாற்றுகின்றன.

 

எந்தப் பெண்ணின் காமம் தணிக்கப் படவில்லையோ, அந்தப் பெண் தேவையற்ற பொருட்களை வாங்கிக் குவிப்பதன் மூலமாக தணிக்கப் படாத காமத்தைச் சரிக்கட்ட முயல்கிறாள். இது தன்னுணர்வற்ற நிலையிலே நிகழ்கிறது. காமம் தணிந்த பெண் தேவையற்றதை வாங்குவதில்லை. ஏனெனில், அவளுடைய மூளை வேலை செய்யும்.

 

அதே போல, தொலைக் காட்சிப் பெட்டியின் அடிமையாக பெண் மாறிப் போவதற்கான காரணங்களில் ஒன்று பாலின்பப் பஞ்சம். அதாவது, பாலின்ப ஆற்றாமை காரணமாக, படுத்த உடனே பெண்ணுக்கு உறக்கம் வருவதில்லை. அதனால், உறக்கம் வரும் வரை தொலைக் காட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்கத் தொடங்குகிறாள். தொலைக் காட்சிப் பெட்டி என்பது முட்டாள்களை உருவாக்குவதில் மட்டுமல்ல, மக்களைத் தனக்கு அடிமையாக்குவதிலும் முதலிடத்தில் இருப்பது. ஒரு மாதத்திற்குப் பார்த்துக் கொண்டிருந்தால் போதும். மனிதனைத் தன் அடிமையாக நுண்ணிய அளவிலேனும் அது மாற்றி விடும்.

 

ஆகவே, முதலில் உறக்கம் வரும் வரை பார்க்கத் தொடங்கிய பெண், சில மாதங்களிலேயே உறக்கத்தை ஒத்தி வைத்து விட்டு பார்க்கக் கூடிய தொலைக் காட்சி அடிமையாக மாறிப் போகிறாள்.

 

ஆகவே, ஒரு கணவன் மதுவின் அடிமையாக மாறிப் போவதற்கும், மகிழ்ச்சியாக வாழ வேண்டிய வீட்டில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்த்து ஒரு மனைவி அழுது கொண்டிருப்பதற்கும் இடையில் எவ்வித வித்தியாசமும் இல்லை. இரண்டுமே பாலின்பப் பஞ்சத்தால் உருவான போதைப் பழக்கங்களே.

 

இவ்விரண்டு போதைகளில் குடும்பத்திற்கு அதிகக் கேடுகளைக் கொண்டு வந்து சேர்ப்பது தொலைக் காட்சிப் போதை.

 

போதைப் பழக்கங்களைத் தவிர, ஒரு ஆண் வாங்கும் இலஞ்சத்திற்குப் பின்னால் கூட, அவனுடைய மனைவியின் தணிக்கப்படாத காமம் மறைந்திருக்கிறது என்று சொன்னால் எல்லோருக்கும் சிரிப்புத் தான் வரும். ஆனால், அது தான் உளவியல் ரீதியான உண்மை.

 

ஒரு ஆண் எந்த அளவிற்கு இலஞ்ச இலாவண்யத்தில் ஊறிக் கொண்டிருக்கிறானோ அந்த அளவிற்கு அவனுடைய மனைவியின் காமம் தணிக்கப் படவில்லை என்று பொருள்.

 

அதாவது, ஒரு ஆணின் வாழ்க்கையிலிருந்து பெண்ணை முழுமையாக விலக்கி விட்டால், அந்த ஆண் ஒரு பொறுப்பற்ற தறுதலையாகவோ, முட்டாள் தனமான முரடனாகவோ, சமூகத்திற்கு எதிரான குற்றங்களைப் புரியக் கூடியவனாகவோ, உதவாக்கரையாகவோ தான் மாறிப் போவான்.

 

ஆணை இயக்க ஒரு பெண் தேவை. பெண் வழங்குகின்ற பாலின்பம் தான் ஆணுக்கான இயக்க விசை. இது இயற்கை விதி. கோடியில் ஒரு ஆண் விதிவிலக்கு.

 

தன்னை இன்புறுத்தி இயக்கிக் கொண்டிருக்கும் பெண்ணை மகிழ்ச்சியாக வைத்திருக்கவே ஆணும் விரும்புகிறான். தன்னுடைய உள்ளங் கவர்ந்த காதலியை பிரமிக்கச் செய்யவே, மலைப்படையச் செய்யவே ஒவ்வொரு ஆணும் விரும்புகிறான்.

 

பெரிய வீரனென்றும், தீரனென்றும், திறமைசாலியென்றும் தன்னைக் காட்டிக் கொள்வதோடு அதை நிரூபிக்கவும் விரும்புகிறான். இது தான் ஆணைச் செயல் படச் செய்கின்ற உந்து விசை. இதைத் தவிர ஒரு ஆணை உந்தித் தள்ளும் சக்தி – இந்த உலகில் – வேறெதுவும் இல்லவே இல்லை.

 

பாலின்பத்தை வழங்கி மனைவியை மலைக்கச் செய்ய முடியாத போது தான், புறம் சார்ந்த வேட்டைப் பொருட்களைக் கொடுத்தாவது தன்னுடைய உள்ளங் கவர்ந்தவளை பிரமிக்கச் செய்ய ஆண் முயற்சி செய்கிறான்.

 

அந்த நெருக்கடிக்கு ஆளாகும் போது தான், ஆண் இலஞ்சப் பணத்திற்காக அடுத்தவனிடம் கை நீட்டுகிறான். இது தன்னுணர்வற்ற நிலையில் நிகழ்கிறது.

 

எனினும் இலஞ்சம் வாங்குபவன் தோற்றுப் போவதற்கான வாய்ப்புகளே மிகவும் அதிகம். ஏனெனில், பாலின்பத்திற்கு மாற்றுப் பொருளாக விளங்கும் திறன் பணத்திற்கோ, பொருட்களுக்கோ இல்லை. சண்டையின் தாக்கம் சற்றுக் குறையலாமே தவிர, ஆழ்மன அளவிலான சண்டை அங்கே அரங்கேறிக் கொண்டு தான் இருக்கும்.

 

ஒரு உதாரணம் வாயிலாக நாம் இதை அறிந்து கொள்ளலாம்.

 

அதாவது ஒரு பெண்ணுக்கு அவளுடைய கணவன் ஒரு பெரிய பளிங்கு மாளிகையைப் பரிசளிக்கிறான். வேறொரு கணவன் அவனுடைய மனைவிக்கு ஒரு காரைப் பரிசளிக்கிறான். இனியொரு கணவனோ அவனுடைய மனைவிக்கு ஒரு தங்க ஆபரணத்தைப் பரிசளிக்கிறான். ஒரு ஏழைக் கணவன் அவனுடைய மனைவிக்குப் பாலின்பங்களை மட்டுமே வழங்குகிறான்.

 

முதல் மூன்று மனைவியரும் தங்கள் கணவனுக்கு தலா ஒரு மதிப்பெண் அளித்த போது கடைசிப் பெண் மட்டும் தன் கணவனுக்கு ஐந்து மதிப் பெண்களை அளித்திருந்தாள்.

 

ஏனெனில், பெண்ணின் ஆழ்மனமும், மூளை நரம்புகளின் வலைப் பின்னலும் பாலியல் ரீதியாகத் தன்னைத் திருப்திப் படுத்தக் கூடிய ஆணின் மார்பில் சரணடைந்து வாழும் படியாகத் தான் வடிவமைக்கப் பட்டுள்ளன.

 

மேற்கண்ட தகவல்களில் ஐயம் கொள்வோர் சங்க இலக்கியங்களைப் படித்துப் பாருங்கள்.

 

சங்கத் தமிழ் புரியாதோர், சிக்மண்ட் ஃப்ராய்ட், ஆல்பிரட் கின்ஸி, மாஸ்டர்ஸ் அண்ட் ஜான்சன், கார்ல் ஜங்க், பெர்ரி போன்ற புகழ் பெற்ற ஆராய்ச்சியாளர்களின் நூல்கள் சிலவற்றைப் படித்துப் பாருங்கள்.

 

ஆங்கிலமும் தெரியாதவர்கள் ஷாலினி போன்ற உளவியல் அறிஞர் களிடமோ, அல்லது காமராஜ் போன்ற பாலியல் அறிஞர்களிடமோ   கேட்டுப்பாருங்கள்.

 

காமத்தின் ஆற்றலை மிகச் சரியாகப் புரிய வைப்பதில் ஓஷோவின் நூல்கள் இணையற்றவை. ஆகவே, ஓஷோவை வாசியுங்கள்.

 

இங்கே சொல்லப் பட்டுள்ள தகவல்களையும் கடந்து, ஏராளமான வடிவங்களில் காமத்தின் தாக்கம் மனிதர்களின் செயல்களில் வெளிப் படுகிறது என்பதை அறிந்து கொள்ளலாம். கொஞ்சம் மெனக்கெட்டு முயற்சித்தால், மனிதப் பிறவியின் ஒவ்வொரு செயலிலும் காமத்தின் தாக்கம் தவறாமல் இருப்பதைக் கூடத் தெரிந்து கொள்ள நேரலாம்.

 

பாலின்ப ஆற்றாமை ஒரு பிசாசுப் பட்டறை.

 

பாலின்பப் பஞ்சமே கொலைகளின் மூலம். பாலின்பப் பஞ்சமே சமூகக் குற்றவாளிகளை உருவாக்கும் வார்ப்புக் கூடம். பாலின்பப் பஞ்சமே பெண்ணின் மீதான பாலியல் தாக்குதலுக்கான பிறப்பிடம்.

 

பாலின்பப் பஞ்சமே குடும்பத்தில் நிகழும் அனைத்து விதமான சண்டை சச்சரவுகளுக்கும் முழு முதற் காரணம்.

 

பாலின்பப் பஞ்சமே வாழ்க்கையில் நிலவும் வறுமைக்குக் காரணம்.

 

பாலின்ப பஞ்சமே மனித சிந்தனையை வக்கிரப் படுத்தக் கூடிய ஒரு பிசாசுப் பட்டறை.

 

மனிதனின் சக்திக்கு எதிராய்ச் செயல் படுவது வேறு யாருமல்ல. தணிக்கப்படாத காமம் தான் சக்தியைச் சிதறடிக்கும் எமன். தணிக்கப் படாத காமம் மனிதனின் ஒவ்வொரு செயலையும் பாதிக்கிறது.

 

ஆழ் மனதை ஆக்கிரமித்துள்ள தணிக்கப் படாத காமம், தன்னுணர்வற்ற நிலையிலே வாழ்வின் ஒவ்வொரு தளத்திலும் வெளிப் படுகிறது. ஆனால், இதையறியாத மனிதனோ ஏதேதோ காரணங்களை அவனாகவே கற்பித்துக் கொள்கிறான்.

 

மனித உடல் பல மண்டலங்களைக் கொண்டது. பல்வேறு காரணங்களால் ஏற்படும் மனிதனுடைய நிராசைகள், ஏமாற்றங்கள், தோல்விகளால் உருவாகும் வருத்தங்கள், துரோகத்திற்கு ஆளாகும் போது ஏற்படும் மன வலிகள் எல்லாம் உடலின் ஏதாவது ஒரு மண்டலத்தில் தான் சேமிக்கப் படுகிறது. எந்த மண்டலத்தில் சேமிக்கப் படுகிறதோ அந்த மண்டலத்தில் அமைந்துள்ள ஏதேனும் ஒரு உறுப்பு நோய்வாய்ப் படுகிறது.

 

ஆனால், எந்த மண்டலத்தில் சேமிக்கப் படுகிறது என்பது யாருக்கும் முன்கூட்டியே தெரியாது. அதாவது, அந்த சேமிப்பானது குணப்படுத்த முடியாத நோயாகி வதைக்கும் வரை தெரியாது.

 

அவ்வாறுள்ள ஒவ்வொரு மண்டலத்தையும் அதற்கென்றுள்ள சுரப்பிகள் தான் பாதுகாக்கின்றன. சேமிக்கப் படுகின்ற கேடுகள் அனைத்தையும், சுத்தம் செய்யும் வேலைகளைச் செய்பவை சுரப்பிகள். இந்த சுரப்பிகளை முறையாக இயங்கச் செய்வது பாலின்பம்.

 

பெண்களின் மன வருத்தங்கள் அனைத்தும் பெரும்பாலும் பால் மண்டலத்தில் தான் சேமிக்கப் படுகிறது. ஏனெனில் அங்கே தான் உரிய உடற்பயிற்சி நடைபெறுவதில்லை. உரிய பயிற்சி நடைபெறாததால், போதுமான இரத்த ஓட்டம் நிகழ்வதில்லை. அதனால் உரிய பிராண வாயு கிடைக்காமல் உயிரணுக்கள் பலவீனமாக இருக்கின்றன.

 

மூலாதார மற்றும் ஸ்வாதிஸ்தான சக்கரங்களின் செயல்கள் தான் அவற்றால் பாதிக்கப் படுகின்றன. இவை தான் கோபம், கவலை, வருத்தம், குரோதம் போன்ற உணர்ச்சிகளை உருவாக்கக் கூடியவை.

 

அதனால் தான் பாலின்பம் நிகழாத பெண் பெரும்பாலும் உணர்ச்சி வயப்பட்ட நிலையிலேயே இருக்கிறாள். குரூரமாகவே நடந்து கொள்கிறாள்.

 

மார்புகள், சினைப்பை, கருப்பை, சிறுநீர்ப்ப்பை, மற்றும் யோனிக்குழாய் போன்றவை தான் பால்மண்டலத்தில் அமைந்துள்ள உறுப்புக்கள். பாலின்பம் நிகழாத பெண்களுக்கு வருகின்ற பெரும்பாலான நோய்கள் இந்தப் பகுதிகளையே தாக்குகின்றன.

 

பாலின்பத்தை போதுமான அளவிற்கு அனுபவிக்கும் பெண்களின் எந்த உறுப்பையும் பால் மண்டலத்திலிருந்து பெரும்பாலும் அறுத்தெரியத் தேவையிருக்காது. பாலின்பம் உறுப்புக்களைப் பாதுகாத்து விடும்.

 

இவையெல்லாம் ஆயுர்வேதத்தால் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நிரூபிக்கப் பட்டுள்ள பேருண்மைகள். இன்றைய அலோபதி அறிவியலும் ஆதாரங்களோடு நிரூபித்துக் கொண்டிருக்கிறது.

 

ஆழ்மனம் நடத்தும் நர்த்தனம்.

 

உடலில் செய்யப்படும் மிகையலங்காரம் எதிர்ப்பால் இனத்திற்கு விடப்படும் காதல் அழைப்பு. நகச்சாயம் பூசுவது முதல் கவர்ச்சியான ஆடையைத் தேர்ந்தெடுப்பது வரை அனைத்துக்கும் காரணம் பாலின்ப ஆர்வம். ஆனால் இதை ஒப்புக் கொள்வது கடினம்.

 

ஏனெனில், மனிதர்களுக்கே தெரியாமல் அவர்களுடைய ஆழ்மனம் நடத்தும் நர்த்தனம் அது. பழந்தமிழ் முதல் இன்றைய நவீன நூல்கள் வரை பல நூல்கள் இந்தத் தகவலைப் பற்றித் தெளிவாகப் பேசுகின்றன.

 

வழக்கத்தை விடக் கூடுதலான வேகத்தில் இமைத்துக் கொண்டிருக்கும் கண்களை அகலமாக விரித்தபடியே, உள்ளங்கையின் உட்புறம் தெரியக் காதருகில் உள்ள கூந்தலை விலக்கிக் கழுத்தைக் காட்டிய படியே, ஆணின் உடலை நோக்கிப் பாதங்கள் இருக்க, அவனது கண்களைக் கண்களால் தழுவிய படியே, மெல்லிய புன்முறுவலை ஆண் மீது ஒரு பெண் வீசினால், அது தன்னுணர்வற்ற நிலையில் அவளையறியாமலே அந்த ஆணுக்கு விடுக்கின்ற காதல் தூது என்று பொருள்.

 

பெண்ணின் உடலில் வாழும் ஆழ்மனம் சம்பந்தப் பட்ட பெண்ணுக்கே தெரியாமல் நடத்தும் மற்றொரு நர்த்தனம் இது. உடல் மொழி மூலம் உள்ளக் கிடக்கையைத் தெரிவித்தல் தன்னையறியாமல் நிகழக் கூடிய ஆழி நடனங்களில் ஒன்று.

 

உடல் மொழி பற்றி வெளிவந்துள்ள அனைத்து நூல்களும் பெண் எவ்வாறெல்லாம் தன்னுணர்வற்ற நிலையில் ஒரு ஆடவனிடம் தன் காதலைத்

தெரிவிக்கிறாள் என்பதைப் பற்றித் தெளிவாகக் கூறுகின்றன.

 

அதே போல, தணிக்கப் படாத காமத்தால் உடலில் உருவாகியுள்ள பாலின்ப ஆற்றாமையின் வெளிப் பாடுகளே பிடாரித் தனமான செயல்கள்.

 

திருமண இணையின் மீது சொல்லப் படும் குற்றச்சாட்டுகளில் மனிதர்களால் ஒப்புக் கொள்ள முடியாது. ஏனெனில், மனிதர்களுடைய பெரும்பாலானவை பாலின்ப ஆற்றாமையின் வெளிப் பாடுகள். இதையும் ஆழ்மனம் நடத்தும் மற்றொரு நடனம் இது.

 

இதைப் போன்ற எண்ணற்ற ஆழ் மன நடனங்களின் தொகுப்புத் தான் மனித வாழ்க்கை.

 

அதாவது பாலுணர்வு என்பது ஆழ்மனம் சார்ந்தது. பசி, தாகம், உறக்கம், மற்றும் சுவாசம் போன்ற செயல்கள் எப்படி ஆழ் மனதால் இயக்கப் படுகிறதோ, அதே போல, மனிதர்களின் பாலுணர்வு தொடர்பான பெரும்பாலான நடத்தைகளும் ஆழ் மனம் சார்ந்தவை.

 

உணவும், நீரும், உறக்கமும், காற்றும் இல்லா விட்டால் மனிதன் உயிர் வாழ முடியாது. அதே போல பாலின்பம் இல்லா விட்டால், மனிதப் பிறவியெடுத்த நபர் மனிதப் பிறவியாக வாழ முடியாது, மிருகமாகத் தான் வாழ வேண்டியிருக்கும். மிருகங்கள் வெறித் தனமானவை. கோடியில் ஒருவர் விதி விலக்காக இருக்கலாம்.

 

உதாரணமாக, என் கணவன் என் மீது செலுத்தும் அன்பைக் காட்டிலும் தன் தாயின் மீது தான் அதிகமான அன்பைச் செலுத்துகிறான். என் கணவனின் குடும்பத்தில் ஒருத்தியாக நான் அங்கீகரிக்கப் படவில்லை. என் இருத்தல் மதிக்கப் படவில்லை. நான் வாய் திறந்து கேட்டாலும் எனக்கு வேண்டியவற்றை வாங்கித் தருவதில்லை.

 

நான் எதை எதிர்பார்த்துத் திருமண வாழ்க்கைக்குள் நுழைந்தேனோ அது எனக்குக் கிடைக்கவில்லை. என் தேவைகளைப் பற்றி கணவன் கண்டு கொள்வதேயில்லை. நான் ஒரு வேலைக்காரியைப் போல் பயன்படுத்தப் படுகிறேன் என்கிற பெண்ணின் கருத்துக்கள் அனைத்தும் பொய்யானவை. அதாவது மாயை. இருள்.

 

மேற்கண்ட அதிருப்திகள் அனைத்துமே விளைவுகள். நான் ஒரு போகப் பொருளாகப் பயன்படுத்தப் படுகிறேன் என்கிற ஒரே தகவல் தான், வெவ்வேறு குற்றச்சாட்டு வடிவங்களில் வெளிப் படுகிறது.

 

தணிக்கப் படாத காமமே விதை. காம உணர்வு தணிக்கப் படும் போது, மேலே சொல்லப் பட்ட அதிருப்திகள் அனைத்தும் தலை கீழாக மாறக்கூடியவை.

 

யார் போரைத் துவங்குகிறாரோ அவர் ஒரு நோயாளி.

 

ஒளி வரும் போது, இருந்த சுவடு தெரியாமல் அகன்று விடும் இயல்புடையது இருள். ஒளியின் முன் இருளின் பதிவுகள் கூட இருக்காது.

 

அதே போலத் தான் அகத் தேவைகள் அனைத்தும் மாயை. இருள். உடற் தேவையே உண்மையான தேவை. அது பூர்த்தி செய்யப் படும் போது அகத் தேவைகள் அனைத்தும் கானல் நீரைப் போல் காணாமற் போய் விடும்.

 

பால் சார்ந்த உச்சகட்ட இன்பங்கள் என்பவை ஒளியைப் போன்றவை. உடலில் உச்சகட்ட இன்பம் நிகழும் போது, ஒளியை கண்ட இருள் அகல்வது கூடத் தெரியாமல் அகன்று விடுவதைப் போல மோசமான உணர்ச்சிகளும் அகன்று விடும்.

 

ஈடுபடும் ஒவ்வொரு முறையும் தவறாமல், உச்ச கட்டப் பாலின்பம் என்கிற ஒளி விளக்கு இல்லற வாழ்வில் ஏற்றப் பட்டால், மனதில் தோன்றக் கூடிய கெட்ட உணர்ச்சிகள் அகன்று, நல்ல உணர்ச்சிகள் தோன்றி, இல்லற வாழ்க்கையில் மகிழ்ச்சியை அதிகரித்துக் கொண்டேயிருக்கும்.

 

ஆகவே, இல்லற வாழ்வில் யார் போரைத் துவங்குகிறாரோ அவர் ஒரு நோயாளி. அவர் ஒரு போகப் பொருளாகப் பயன் படுத்தப் படுகிறார். அதனால். பாலின்ப ஆற்றாமை என்கிற நோய் அவரைத் தாக்கியிருக்கிறது. ஆகவே அவரோடு சரிக்குச் சரியாகப் போரிடக் கூடாது.

உடல் சார்ந்த ஒரு நோயாளியிடம் நடந்து கொள்வதைப் போன்றே பாலின்ப ஆற்றாமை என்கிற மன நோய்க்கு ஆளான இணையிடம் அனுதாபத்தோடு நடந்து கொள்ள வேண்டும்.

 

அவரது உடலில் சுரந்து கொண்டிருக்கும் நச்சுத் திரவத்தின் சுரப்பைத் தடுத்து நிறுத்தி நல்ல திரவங்கள் சுரக்க அவருக்கு உதவ வேண்டும். சமூக நல்லொழுக்க விதிகளின் படி, திருமண இணையால் மட்டுமே அவருக்கு உதவ முடியும்.

 

தினசரிகளில் வெளி வருகின்ற செய்திகளான, கணவனிடமிருந்து பிரிந்து வாழ்தல், தானும் வாழாமல் விவாகரத்தும் வழங்காமல் திட்டமிட்டுக் கணவனின் வாழ்க்கையைப் பாழடித்தல், கணவனுக்குப் பிறந்த குழந்தையை அவனுடைய கண்ணிலேயே காட்டாமல் பிரித்து வளர்த்தல்,

 

கணவனுக்கு எதிரிலேயே கள்ளக் காதலனுடன் வாழ்க்கை நடத்துதல், வரதட்சணை குறித்துக் கனவு கூடக் கண்டிராத கணவனின் மீது வரதட்சணை வழக்குத் தொடுத்தல், கணவனாகவே தற்கொலை செய்து கொண்டு செத்துப் போகும் அளவிற்கு நெருக்கடி கொடுத்தல்,

 

திட்டமிட்டு கணவனைக் கொலை செய்தல், கணவனைத் தண்டிப்பதாகக் கருதிக் கொண்டு குழந்தையைத் தண்ணீர்த் தொட்டிக்குள் தள்ளிக் கொலை செய்தல் போன்றவையெல்லாம் நள்ளிரவில் நடைபெற்ற குடும்ப விவகாரச்

சண்டையின் விளைவுகளே.

 

மனைவியை அடித்தல், மது குடித்தல், பொறுப்பில்லாமல் நடந்து கொள்தல், குடும்பச் செலவிற்குப் பணம் தர மறுத்தல், வீட்டை ஒரு விடுதி போலப் பாவித்தல், சந்தேகப்படுதல், பிற ஆண்களுடன் சேர்த்து வைத்து கதை கட்டி விடுதல், மனைவியின் பெற்றோரைத் திட்டுதல், வீட்டை விட்டு மனைவியை விரட்டியடித்தல், அல்லது தானே வீட்டை விட்டு வெளியேறி விடுதல், நேரிடையாகவே மனைவியைக் கொலை செய்தல் போன்ற கணவனின் செயல்களுக்கு, குடும்ப விவகாரச் சண்டையின் போது நடைபெறக் கூடிய

பரஸ்பரத் தூற்றல்களே விதையாக இருக்கின்றன.

 

பெரும்பாலான தற்கொலைகளுக்குப் பின்னால் மறைந்திருக்கக் கூடிய முதன்மையான காரணம் பாலின்ப ஆற்றாமை.

 

பாலின்ப ஆற்றாமையால் பாதிக்கப் பட்டிருக்கும் வேளையில், குடும்ப விவகாரச் சண்டையும் போடத் துவங்கினால், போதையேறிய ஒரு குரங்கை தேளொன்று கொட்டியதோடு, பிசாசும் பிடித்துக் கொண்ட மாதிரி தான் தம்பதியரால் செயல் பட முடியும்.

 

குடும்ப விவகாரச் சண்டை என்பது என்ன.

 

அப்போது மணி இரவு பதினொன்று. மனைவி குழந்தையை அணைத்த படி உறங்கிக் கொண்டிருக்கிறாள். கணவன் அரவமில்லாமல் அவளை எழுப்புகிறான். தூக்கம் கலைந்த எரிச்சலில் அவள் சீறி விழுகிறாள். கணவன் பாலுறவில் ஈடுபட விரும்புகிறான். மனைவி விரும்பவில்லை. கணவன் கெஞ்சுகிறான். மனைவியோ மிஞ்சுகிறாள். அதன் பின் கணவன் வற்புறுத்துகிறான். மனைவி உறுதியாக மறுக்கிறாள். கணவன் மிரட்டுகிறான். மனைவி விரட்டுகிறாள்.

 

தான் செய்தவற்றையெல்லாம் சொல்லிக் காட்டி கணவன் அடம் பிடிக்கிறான். மனைவி மசியவில்லை. அதன்பின் மனைவியின் குடும்பத்தினரைப் பற்றியெல்லாம் கூட கணவன் ஏசத் துவங்குகிறான். பதிலுக்கு கணவனின் குடும்பத்தினரைப் பற்றி மனைவி ஏசத் தொடங்குகிறாள்.

 

ஒருவருக்கொருவர் பரஸ்பரம் இழிவு படுத்திப் பேசிக் கொள்கிறார்கள். இருவருடைய குரலும் உயரத் தொடங்குகிறது. இருவரும் உணர்ச்சிவயப் படத் தொடங்கிய போது, சீர்தூக்கிப் பார்த்துப் பேசக் கூடிய மேல்மனம் ஓடி ஒளிந்து கொள்கிறது.

 

அதன்பின் தங்கள் திருமணம் குறித்து ஆழ்மனதில் ரகசியமாக அடைந்து கிடந்த நிராசைகள் அனைத்தும் கடல் மடை திறந்தாற் போலச் சீற்றத்துடன் பீறிட்டு வெளிவந்து கொட்டத் தொடங்குகின்றன. ஒருவரை மற்றவர் ஏமாற்றி விட்டதாகக் குற்றம் சாட்டிக் கொள்கிறார்கள். பரம விரோதிகளை விட மோசமாக அவமதித்துக் கொள்கிறார்கள். உட்ச பட்சமாகத் தூற்றிக் கொள்கிறார்கள்.

 

ஆணின் ஆழ்மனதில் படிந்து கிடக்கும் ஆதிக்க மனோபாவம் காரணமாக, கணவனின் கை நீளப் பார்க்கிறது. தாக்க வரும் ஆபத்திலிருந்து தற்காத்துக் கொள்ளும் கற்காலப் பெண்ணின் கூக்குரலாக, மனைவியின் குரல் அண்டை வீட்டிற்குக் கேட்கும் அளவிற்கு – அழுகை கலந்து – உயரத் தொடங்குகிறது.

 

அந்தச் சத்தத்தால், தூக்கம் கலைந்து எழுந்த குழந்தை தன் உயிருக் குயிரான இரண்டு ஜீவன்களிடையே நடைபெற்றுக் கொண்டிருக்கும் போரைக் கண்டு விழிபிதுங்கி அழத் தொடங்குகிறது. கணவன் அடங்கத் தொடங்குகிறான்.

 

திருமண இணையின் மனதில் தங்களுக்குள்ள உண்மையான மதிப்பையும், அங்கீகாரத்தையும் இருவரும் தெள்ளத் தெளிவாக அறிந்து கொள்கிறார்கள். மனம் துடிக்கிறது. முகங்கள் பேயறைந்த மாதிரிக் காட்சியளிக்கிறது. உடல் வேர்க்கிறது. வாய் வரள்கிறது. சுவாசத்தின் வேகம் அதிகரிக்கிறது. பல மைல் தூரம் நிற்காமல் ஓடியதைப் போல உடல் களைப்படைகிறது.

 

இருவருடைய மனநிலையும் கொதிநிலையில் இருக்கிறது. அப்படியே ஆளுக்கொரு மூலையில் சுருண்டு படுத்துக் கொள்கிறார்கள். உறக்கம் எண்ணங்களின் நெரிசலால் மனம் சிந்திக்கவே முடியாமல் தடுமாறும் நேரத்தில் உறக்கம் வந்தது தெரியாமல் உறங்கிப் போகிறார்கள். அடுத்த நாள் காலையில் அடித்துப் போட்டது போன்ற உடல் வலி யோடும், யாரையோ பறி கொடுத்து விட்டதைப் போன்ற மனவலியோடும் மிகவும் களைப்படைந்தவர்களாக விழித்தெழுகிறார்கள்.

 

இது தான் குடும்ப விவகாரச் சண்டை என்று எண்ண வேண்டாம். கணவனும் மனைவியும் ஒருவரையொருவர் மனதிற்குள் ரகசியமாக சபித்துக் கொண்டே உறங்கச் சென்றாலும் அதுவும் குடும்ப விவகாரச் சண்டையே. மேலே சொல்லப்பட்ட அனைத்தையும் மனதிற்குள்ளேயே நிகழ்த்திப் பார்த்து விட்டு, வேறொரு காரணத்தை வைத்து அந்த ஆவேசத்தை வெளியிட்டால், அதுவும் கூட குடும்ப விவகாரச் சண்டையே.

 

ஆகவே, கணவன் மனைவிக்கிடையே நடைபெறுகின்ற சண்டைகள் அனைத்தும் தணிக்கப் படாத காமத்தை மையமாகக் கொண்ட ஒரே நெடுந்தொடரே. மோதல்கள் அனைத்தும், போகப் பொருளாக மனைவியைப் பயன்படுத்திக் கொண்டிருப்பதன் அடையாளங்களே. விளைவுகளே.

 

எந்தக் குடும்பத்தில் மனைவி ஒரு போகப் பொருளாகப் பயன்படுத்தப் படுகிறாளோ அந்தக் குடும்பத்தில் சண்டை நடந்தே தீரும். பல் வேறு காரணங்களை மையமாகக் கொண்டு வருவதைப் போன்று அவை காட்சிப் படுத்தப் படலாம். சண்டைக்கான தலைப்புக்கள் அனைத்தும் ஆழ்மனம் நடத்துகின்ற ஏமாற்று வித்தைகள்.

 

காமத்தை மையமாகக் கொண்டு நடைபெற்ற குடும்ப விவகாரச் சண்டையின் போது, ஆழ்மனதில் நுழைந்து விட்ட எண்ணங்களை அடிப்படையாகக் கொண்டு, கிடைத்த காரணத்தைத் தவற விடாமல் பயன்படுத்தி, தனது சீற்றத்தை வெளிப்படுத்துகின்ற ஆழ்மனதின் நரித்தனங்களே பல்வேறு தலைப்புகளில் சண்டைகளாக வெடிக்கின்றன.

 

மேலும், எப்படிப்பட்ட அதி மேதாவியையும் தொழில் போட்டிகளில் தோல்வியடையச் செய்யக் கூடிய, குடும்பத்தின் பொருளாதாரத்தைச் சீரழிக்கக் கூடிய, குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாழடிக்கக் கூடிய, கணவனைக் குடிகாரனாக மாற்றக் கூடிய, மனைவியைக் கள்ளக் காதலில் தள்ளக் கூடிய பேராபத்து குடும்ப விவகாரச் சண்டையின் பின்னால் மறைந்திருக்கிறது.

 

இந்த அத்தியாயத்தில் சொல்லப்பட்டுள்ள அனைத்தையும் விஞ்ஞான பூர்வமாக நிரூபிக்க முடியும்.

 

0% Complete