fbpx
Course Content
90s Kids Kamasutra
About Lesson
நன்றியறிவிப்பு

 

நான் ஒரு பிறவி மேதை அல்ல. உலக அறிவைப் பொறுத்தவரை, உங்களில் பலரை விட, அப்பாவியாகவே நான் வாழ்ந்திருக்கிறேன். அதனால், எண்ணற்ற அனுபவங்களை நான் பெற்றிருக்கிறேன். ஆனால், அனுபவங்களை அனுபவிப்பதோடு நின்று விடாமல், நான் சந்தித்த ஒவ்வொரு அனுபவமும் ஏன் நிகழ்ந்தது என்கிற காரணத்தை தேடத் துவங்கினேன்.

 

தேடலின் போது பல விடைகளைக் கண்டேன். அந்த விடைகளில் – நிரூபிக்க முடிந்த விடைகளை மட்டும் – இந்த நூலின் வாயிலாக உங்களோடு நான் பகிர்ந்து கொள்கிறேன். என் இடையறாத் தேடலின் போது, எண்ணற்ற நூல்களை நான் வாசித்திருக்கிறேன். வாசித்தவற்றைப் பயன்படுத்தி வெற்றியும் பெற்றிருக்கிறேன். ஆனால், எந்த நூலின் வாயிலாக எந்தத் திறனைக் கற்றுக் கொண்டேன் என்பதை, என்னால் விண்டுரைக்க முடியாது.

 

அதனால், உலகில் இதுவரை தோன்றி மறைந்துள்ள மற்றும் இப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கின்ற, எல்லா நூலாசிரியர்களுக்கும், என் குரு ஹீலர் பாஸ்கர், போதிப் பிரவேஷ் , கனக சுப்புரத்தினம் ஐயா மற்றும் தட்சணாமூர்த்தி அவர்களுக்கும் என் மனப் பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

எச்சரிக்கை.

 

இல்லற வாழ்வைக் குடும்ப விவகாரச் சண்டைகளற்ற பூஞ்சோலையாக்கி, ஆழ்மன நிம்மதியோடு, தம்பதியர் வாழ்வதற்கான பல ஆலோசனைகளையும், ஒரு தார வாழ்வில் கடைப் பிடிக்க வேண்டிய தாம்பத்ய அணுகு முறைகளையும், தமிழர்களின் பண்டைய ஞானமான தந்த்ரா வழிமுறைகளையும், இந்நூல் பரிந்துரை செய்கிறதே தவிர, மருத்துவர்கள் தொழில் ரீதியாகச் செய்யக் கூடிய மருத்துவ சிகிட்சையையோ, மனநல ஆலோசனையையோ வழங்கவில்லை.

 

நூலில் சொல்லப் பட்டுள்ள தகவல்கள் எதுவும் உத்தரவாதம் கொண்டதல்ல. சொல்லப் பட்டிருப்பவை போல் நிகழலாம். நிகழாமலும் போகலாம். அது அவரவருடைய அந்தந்த நேரத்து மன நிலையைப் பொறுத்தது. ஆகவே இதை ஒரு கல்வியாகவே கருத வேண்டும்.

 

மேலும், இந்நூலில் பரிந்துரைக்கப் பட்டுள்ள அறிவுரைகளைப் பின்பற்றியதால் ஏற்பட்டு விட்டதாகச் சொல்லப் படும் எந்தப் பிரச்சினைக்கும், பொருள் இழப்புகளுக்கும், உடல்நல பாதிப்புகளுக்கும், உறவு முறைச் சேதங்களுக்கும், இன்ன பிற அபாயங்களுக்கும், மன உளைச்சல்களுக்கும், நூலின் ஆசிரியரோ, பதிப்பாளரோ, வெளியீட்டாளரோ அல்லது விற்பனையாளரோ எவ்விதப் பொறுப்பையும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்கிற தகவல் சட்ட பூர்வமாக இங்கே வலியுறுத்தித் தெரிவிக்கப் படுகிறது.

0% Complete