fbpx
Course Content
90s Kids Kamasutra
About Lesson

இல்லற வாழ்வில் போகப் பொருளாய்ப் பெண் படும் அவதி

 

மனித உடலில் இயற்கையாக உருவாகக் கூடிய காம வேட்கையை, சட்ட பூர்வ வழியில் தணித்துக் கொள்வதற்கான களம் தான் திருமணம்.

 

பெண்ணுக்குள்ள மரபணு நெருக்கடி.

 

உயிரினங்களில் பெண் தான் படைப்புச் சக்தி.

 

தனது இனத்தைப் பெருக்கி, பூமிப்பந்தில் தழைத்திருக்கச் செய்வதற்காகவே, பெண் இனம் படைக்கப் பட்டிருக்கிறது.

 

பெண் தாய்மையுற்றாக வேண்டும். பெண்ணின் மரபணு தருகிற நெருக்கடி இது.

 

பருவமடைந்த பெண்ணின் உடலில், பால் சுரப்பதற்குத் தேவையான அளவு கொழுப்பு சேமிக்கப் பட்டவுடனே, இந்த நெருக்கடி தொடங்கி விடுகிறது. வயது, ஒரு பொருட்டல்ல.

 

பெண்ணுக்கு ஏற்படும் இயற்கையான நெருக்கடியை முறையான வழிகளில் எதிர்கொள்ளவே திருமண நடைமுறை அறிமுகமாயிற்று. அதன் படி உரிய வயது வந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே திருமணம் நிகழ்கிறது.

 

திருமண வாழ்வே கூட, பாலுறவு விளையாட்டுகளோடு தான் துவக்கமாகிறது. அப்போது பெண்ணின் உடலுக்குரிய பாலின்பங்கள் அனைத்துமே கிடைக்கலாம். அல்லது உராய்வின்பம் தவிர உச்ச கட்ட பாலின்பங்கள் எதுவுமே கிடைக்காமலும் போகலாம். எனினும், தயக்கமின்றி பெண் இணைகிறாள். வலிய வந்து உறவு கொள்கிறாள். குழந்தை பிறக்கும் வரை, தன்னுணர்வின்றி ஆணுடன் இணை சேர்ந்து கொண்டேயிருக்கிறாள் பெண்.

 

குழந்தை பிறக்கிறது.

 

மேலும், நிச்சயமாக குழந்தை உயிர் பிழைத்துக் கொள்ளும் என்கிற உறுதியும் கிடைக்கிறது.

 

அந்த உறுதி கிடைத்ததும், மனித குலத்தைச் தழைக்கச் செய்ய வேண்டும் என்கிற பெண் மரபணுவின் நோக்கம் நிறைவேறி விடுகிறது.

 

அதனால், குழந்தைப் பேறுக்குப் பின் பாலுறவில் ஈடுபடும் படி, பெண்ணை உந்தித் தள்ளுகின்ற நெருக்கடி இருப்பதில்லை. ஆகவே, தன்னுணர்வற்ற நிலையில் பாலுறவில் ஈடுபடும் சூழலிருந்து, தாயான பிறகு, பெண் விடுபட்டு விடுகிறாள்.

 

அதனால், இது வரை பாலுறவில் ஈடுபட்டதன் மூலம் தனக்குச் கிடைத்த இன்பங்களின் அடிப்படையில் மேற்கொண்டு பாலுறவு கொள்வது குறித்து பெண் முடிவெடுக்கும் சூழல் உருவாகிறது.

 

பெண்களின் பாலுறவு அனுபவம் என்ன?

 

ஆய்வறிக்கைகளின் படி, தொண்ணூறு சதவீத பெண்கள் பாலின்பங்களை அனுபவிக்காதவர்கள். இல்லற வாழ்வில் போகப் பொருள்களாகவே அவர்கள் பயன்படுத்தப் படுகிறார்கள்.

 

உறவில் ஈடுபடும் ஒவ்வொரு முறையும் ஆணுக்குரிய பாலின்பத்தை, கணவன் தவறாமல் பெற்று விடுகிறான். ஆனால், பெண்ணுக்குரிய ஒரு இன்பம் கூட மனைவியின் உடலில் நிகழ்வதில்லை.

எப்போதோ ஒரு முறை நிகழ்ந்திருக்கலாம்.

 

அதுவும் உடல் முழுவதும் பரவக்கூடியதாக இல்லாமல், பால் மண்டல அளவில் மட்டும் ஏற்பட்டதாக இருக்கலாம்.

 

அது கூட கணவனால் திட்டமிட்டு வழங்கப் பட்டதல்ல.

 

எதேட்சையாக நிகழ்ந்த இன்பம் அது.

 

மற்றபடி, உச்சபட்ச பேரின்பப் பரவசமெல்லாம் தொண்ணூறு சதவிகித பெண்களின் வாழ்வில் ஏற்பட்டதில்லை.

 

இல்லற வாழ்வில் பெண் படும் அவதி

 

பாலுறவு என்பது குழு விளையாட்டு.

 

ஆணும், பெண்ணும் ஒன்றிணைந்து தத்தம் உடலுக்குரிய இன்பங்களைப் பெறுவதற்காக நடத்துகின்ற விளையாட்டு.

 

வெற்றி தோல்வி என்பதே இல்லாத ஒரே விளையாட்டு பாலுறவு.

 

கொடுத்துப் பெறுவது என்பதே ஒரே விதி.

 

ஆனால், இந்த விதி குடும்ப வாழ்வில் ஆண்களால் பின்பற்றப் படுவதில்லை.

 

ஒவ்வொரு முறையும் கணவன் தான் பெற்றுக் கொண்டேயிருக்கிறான். மனைவி கொடுப்பதோடு சரி. பெறுகிற பேச்சிற்கே இடமில்லை.

 

உராய்வின்பம் மட்டுமே மனைவியின் தலைவிதி.

 

கணவனுக்கு தூரித ஸ்கலிதம் ஏற்படும் நாட்களில், அந்த உராய்வின்பம் கூட மனைவிக்குக் கிடைப்பதில்லை.

 

என்ன நடந்தது என்பதை மனைவி உணர்வதற்கு முன்பே, அனைத் தையும் முடித்துக் கொண்டு, கழிவறை நோக்கிக் கணவன் ஓடுவது, இல்லற வாழ்வில் நடக்கவே நடக்காத அதிசயம் அல்ல.

 

அதனால், எவ்வித இன்பத்தையும் வழங்காத இந்த விளையாட்டின் மீது மனைவி ஆர்வத்தை இழக்கிறாள்.

 

ஆர்வமில்லாத செயலில் ஈடுபட வேண்டிய சூழல் எழுகிற போது அது வேலை பளுவாகத் தெரிகிறது.

 

ஆகவே, கூடுதல் வேலைப்பளுவை எதற்காகச் சுமக்க வேண்டும் என்று முடிவெடுத்து, மனைவி பாலுறவில் ஈடுபட மறுக்கிறாள்.

 

இது தவிர, திருமண வாழ்வில் நுழைந்து விட்ட பெண்ணுக்கு, அவளை அடிப்பது, குடித்து விட்டுத் துன்புறுத்துவது, பொருளீட்டாதது போன்றவற்றை விட மோசமான கொடுமையொன்று, வெளியுலகத்திலுள்ள யாருக்கும் தெரியாமல் அவளுடைய கணவனால் இழைக்கப்படுகிறது.

 

தம்பதியர் உறவு கொள்கின்றனர். கணவனின் உணர்வுகள் எடுத்தவுடனே நூறு கிலோ மீட்டர் வேகத்தில் கிளம்ப விடுகிறது. மனைவியின் உணர்வுகளோ மனதில் துவங்கி, உடலில் பரவி, நகரத் தொடங்கி, கணவனின் வேகத்தை நெருங்கும் வேளையில் ஒரு விபத்து நிகழ்ந்து விடுகிறது.

 

இதோ இன்பத்தை நெருங்கி விட்டோம். ஓரிரு நிமிட இயக்கம் மட்டுமே தேவை என்கிற நிலையில், திடீரென கணவனின் வாகனம் எரிபொருள் தீர்ந்து நின்று விடுகிறது. கணவன் நீர்த்துப் போய் செயலற்றவனாகி விடுகிறான்.

இனம் புரியாத ஒரு இன்பம் உடலில் நிகழவிருந்தது. வெகு அருகில் நெருங்கியுமிருந்தது. ஆனால், கணவன் செயலிழந்து விட்டான். அவன் மட்டும் தாக்குப் பிடித்துச் செயலாற்றியிருந்தால், மனைவியின் உடலிலும் ஒரு இன்பக் கிளர்ச்சி ஏற்பட்டிருக்கும். ஆனால், அவனோ சுயநலமாக, அல்லது நீடித்துச் செயலாற்றும் ஆற்றலற்றவனாக முடித்துக் கொண்டான்.

 

மீண்டும் அவன் தயாராக அரை மணி நேரமாகலாம். ஆனால், அதற்குள் மனைவியின் உடலில் ஏற்பட்டிருந்த பாலுணர்வின் கிளர்ச்சி நிலை துவங்கிய இடத்திற்கே வந்து சேர்ந்து விடும்.

 

ஏனெனில், உட்ச உணர்வுகள் எதுவும் நிலைத்து நிற்பவையல்ல.

 

இது தான் கொடுமை, நடுக்கடலில் பல நாட்கள் தத்தளித்துக் கொண்டி ருந்த ஒரு நபர் தனக்குக் கிடைத்த உணவுப் பொட்டலத்தையும், குடிநீரையும் கடல் நீரில் தவற விட்டதற்கு இணையான வலி தரும் அனுபவம் இது.

 

உச்ச கட்ட இன்பம் ஏற்படவிருந்த தருவாயில், அதை இழக்க வேண்டிய நிலை ஏற்படும் போது, பெண்ணின் உடலில் ஒரு இருப்புக் கொள்ளாத நிலை ஏற்படுகிறது. ஆழ் மனதிலே இனம் புரியாத ஒரு சோகம் யேறுகிறது. அவளது உடலே சுமக்க முடியாத பாரமாகத் தெரிகிறது. முக்கியமான ஏதோவொன்றைத் தொலைத்து விட்டாற் போல், தன்னுடைய பெயரைத் தானே மறந்து விட்டாற் போல், ஒரு தவிப்பு பெண்ணின் ஆழ்மனதில் ஏற்படுகிறது.

 

பெண் படுகின்ற இந்த அவதியைப் பற்றி வார்த்தைகள் மூலமாக ஆணுக்குப் புரிய வைப்பது கடினம்.

 

ஆனால், கீழ்க்கண்ட அனுபவம் வாயிலாகப் பெண்ணின் அவதியை எளிதாகப் புரிந்து கொள்ளலாம்.

 

பாலுறவில் ஈடுபடும் ஆண் உச்ச கட்ட இன்பத்தையும் அனுபவிக்காமல் உயிர்நீரையும் வெளியேற்றாமல் அவற்றை நெருங்கும் உணர்வு ஏற்படும் போது உறவிலிருந்து வெளியேறி விட வேண்டும்.

 

இந்நிலை ஆறு மாதங்களுக்குத் தொடர்ந்து நிகழட்டும். இடையில் சுய இன்பத்திலும் ஈடுபடக் கூடாது. அவ்வாறு ஆறு மாத காலத்தைக் கடத்திய பிறகு ஒரு ஆணின் மனநிலை எப்படி இருக்குமோ அப்படித் தான், நெருங்கி வந்த இன்பத்தை நழுவ விட்ட பெண்ணின் மனநிலையும் இருக்கும்.

 

வாழ் நாள் முழுவதும் இதே துன்பத்தைத் தான் பெண்   அனுபவித்துக் கொண்டிருக்கிறாள்.

 

 

பாலின்ப ஆற்றாமை நோய்.

 

திருமணம் காரணமாக, கணவனின் மூலம் மட்டுமே பாலின்ப உச்ச கட்டக் கிளர்ச்சிகளைப் பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் தான் பெண் இருக்கிறாள். மேற்கத்திய நாடுகளில் வாழும் பெண்களைப் போல், பகிரங்கமான பல தார உறவில் இந்தியப் பெண் இன்னும் இறங்கி விடவில்லை.

அதனால், ஒவ்வொரு முறையும் கணவனிடம் எதிர்பார்த்து ஈடுபடுகிறாள். எதிர்பார்த்தது நிகழாத போது ஏமாற்றமடைகிறாள்.

தொடர் ஏமாற்றம் விரக்தியை உருவாக்குகிறது.

 

என்ன இருந்து என்ன பயன்? இந்த இன்பம் இல்லையே என்கிற வீரக்தி பாலுறவின் மீதான வெறுப்பாக மாறுகிறது. நாளடைவில், அந்த வெறுப்பே கணவனின் மீதான கோபமாக உருவெடுக்கிறது. இறுதியில் அக் கோப நிலையே அவளுடைய அடிப்படைப் பண்பாகி, அவள் பிடாரியாகிறாள்.

 

தேவதையைப் போல் திருமண வாழ்விற்குள் அடியெடுத்து வைத்த பெண் அவளுடைய உடற்தேவை நிறைவேறாத காரணத்தால், தன்னைப் போகப் பொருளாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கும் கணவனை வதைப்ப வளாக, தன்னுணர்வற்ற நிலையிலே மாறி விடுகிறாள்.

 

பெண்ணின் பிடாரித் தனத்தை “குணக்கேடு” என்றும் குறிப்பிடலாம். இந்த குணக்கேடானது ஆழ்மனம் சார்ந்தது. ஏறக்குறைய பத்து முதல் இருபது சதவிகித ஹிஸ்டீரியா நோய் இது.

 

இதற்குக் காரணம் தணிக்கப்படாத காமம். இந்த குணக்கேடால் பாதிக்கப் படுவதைத்தான்பாலின்ப ஆற்றாமைநோய் என்று சொல்கிறோம்.

 

இந்நோய் தான் இல்லற வாழ்க்கையை நரக வாழ்க்கையாக மாற்றிக் கொண்டிருப்பதோடு, குடும்ப அமைப்பையும் தகர்த்துக் கொண்டிருக்கிறது.

 

ஆனால், கணவனுக்கு இந்த உண்மைகள் எதுவுமே தெரிவதில்லை. மனைவியின் காமத்தைத் தூண்டி விட்டு விட்டு, அதைத் தணிக்காமலே அவன் உறங்கப் போய் விட்டதையோ, அது தான் மனைவியின் மனநலனைப் பாதித்து, அவனைப் பாடாய்ப் படுத்தி, குடும்ப வாழ்க்கையை நரகமாக்கு கிறது என்பதையோ அவன் உணர்வதே இல்லை.

 

அதற்கு மாறாக, இப் பெண் நல்லவள் அல்ல. ராட்சசியை நம் தலையில் கட்டி விட்டார்கள். இவளுக்கு பேய் பிடித்து விட்டது. பக்தி முற்றி சாமியாடுகிறாள். இவள் இலட்சியமற்றவள். குடும்பம் நடத்தத் தெரியாதவள். இவளுடைய வளர்ப்பு சரியில்லை. வேறு யாரோ இவளை இயக்குகிறார்கள். என்றும் இன்ன பிறவாகவும் கருதுகிறான்.

 

ஆணின் பாலியல் அறியாமை.

 

பெண்ணின் உச்ச கட்ட இன்பம் பற்றியோ, அந்த இன்பம் நிகழ்வதற்கும் பெண்ணின் மன நிலைக்கும் இடையில் உள்ள ஆழமான தொடர்பு பற்றியோ ஆண்களுக்குத் தெரியாது.

 

ஆனால், ஆண்களைக் குறை கூற முடியாது. ஏனெனில், அவர்கள் உடலில் நிகழ்கின்ற உச்ச கட்ட இன்பம் வேறு, விந்து வெளியேற்றம் வேறு என்கிற தகவலே கூடப் பலருக்குத் தெரியாது.

 

விந்தை வெளியேற்றுவது தான் பாலுறவு. பெண்ணுறுப்பு என்பது விந்தைக் கொட்டுவதற்கான ஒரு குப்பைக் கூடை. ஆணின் விந்து அங்கே கொட்டப் பட்டவுடனே, பெண்ணுக்கும் இன்பம் நிகழ்ந்து விட்டதாகப் பொருள். இது தான் பெரும்பாலான ஆண்களின் பாலியல் அறிவு.

பெண்ணுக்குப் பல்வகை உச்ச கட்ட இன்பங்கள் உண்டு. அவற்றை நிகழ்ச் செய்து, அவளுடைய மனநலம் காப்பது அவசியம். அப்போது தான் குடும்ப வாழ்வில் அமைதி தவளும். ஆனந்தம் பெருகும். அவனுக்கும் பாலின்பம் வழங்கப்படும் என்கிற தகவல் பல ஆண்களுக்குத் தெரியாது.

 

பாலியல் கல்வியில்லை. காமசூத்ரா, கொக்கோக சாஸ்திரம் போன்ற நூல்களைப் பற்றிக் கேள்விப் பட்டதோடு சரி. ரதி ரகசியங்கள், அனங்க ரங்கா, நறுமணத் தோட்டம், ரதிரத்ன பிரதீபிகா போன்ற நூல்களைப் பற்றிக் கேள்விப் பட்டது கூட இல்லை.

 

குறளின் காமத்துப் பாலையோ, சங்க இலக்கிய கருத்துக்களையோ படித்ததேயில்லை. படித்தாலும், பெண்ணின் விரக தாபம், பசலை நோய் பற்றிய கருத்துக்கள் எதுவும் புரிவதில்லை. மேலும், பாலியல் அறிஞரிடம் ஆலோசனை பெற்றுக் கொள்கிற விழிப்புணர்வும் இல்லை.

 

ஆகவே, பெண்ணுக்குரிய தாம்பத்ய இன்பங்களை வழங்குவது குறித்தஅரிச்சுவடிகூடத் தெரியாத நிலையில் தான் பல ஆண்கள் திருமணம் செய்து கொள்கிறார்கள்.

 

கூடவே, சுய இன்பத்தின் மூலம் ஏற்படுத்திக் கொண்ட பலவினத்தை களைந்து கொள்ளாமலே, உரிய பயிற்சிகள் வாயிலாய்ப் பால் மண்டலத்தை பாப்படுத்திக் கொள்ளாமலே, ஆபாசப் படங்கள் வழங்கும் அசட்டுத்தனமா வழிகாட்டுதலை மட்டும் ஆதரவாகக் கொண்டு தாம்பத்ய வாழ்வைத் துவக்குகிறார்கள்.

 

பெண்ணைக் கருவுறச் செய்வது தான் ஆண்மைக்கான அடையாளம் என்று பெரும்பாலான ஆண்கள் கருதுகிறார்கள். உச்ச கட்ட இன்பத்தை ஒரு முறை கூட அனுபவிக்காமலே, பத்து முறை கூடப் பெண்ணால் கருவுற முடியும் என்கிற தகவல் அவர்களுக்குத் தெரியாது.

அதனால், மனைவியைக் கருவுறச் செய்துள்ள ஒவ்வொரு ஆணும், மனைவிக்குரிய இன்பங்களை வழங்குகிற கல்வியில் “டாக்டர்” பட்டத்தைப் பெற்ற மாதிரியே தங்களைப் பற்றிக் கருதிக் கொண்டிருக்கிறார்கள்.

 

பசுவைச் சினையாக்க கால்நடைடாக்டர்செய்கிற வேலையைத் தான் அவர்கள் செய்திருக்கிறார்கள் என்கிற தகவல் பெரும்பாலான கணவர்களுக்குத் தெரியவே தெரியாது.

 

மேலும், தன் தாம்பத்ய வாழ்வில் தனக்குரிய உச்ச கட்ட இன்பம் ஒரு முறை கூட நிகழவேயில்லை என்பதை மனைவியும் சொல்வதில்லை.

 

ஏனெனில், மனைவியின் உடற் தேவையைத் தன்னால் பூர்த்தி செய்ய முடியவில்லை என்கிற தகவல் தெரிந்து விட்டால், கணவன் சந்தேகப்படத் தொடங்கி விடுவான். கண்காணிக்கத் தொடங்கி விடுவான். அதனால், மனைவியின் நிம்மதி பறி போய் விடும். ஆகவே, தனக்குரிய இன்பம் நிகழவே யில்லை என்கிற உண்மையை, எந்த மனைவியும் தன் கணவனிடம் காட்டிக் கொள்வதில்லை.

 

சில நேரங்களில் ஆணுக்கு சீக்கிரமாக முடியட்டும் என்பதற்காகவோ, அல்லது கருவாய்க்குள் உருவாகும் எரிச்சல் காரணமாகவோ, ஒரே நிமிடத்தில் “ஆ… ஊ…” எனப் பொய்யாக நடிக்கும் பெண்களும் உண்டு. ஆனால், அது “நடிப்பு” என்பது, எண்பது சதவீத ஆண்களுக்குத் தெரியாது.

 

அதனால்,பெரும்பாலான ஆண்கள் தங்களைப்பாலியல் ஞானிகள்என்றே கருதிக் கொண்டிருக்கிறார்கள். அதன் காரணமாகக் கற்றுக் கொள்ளும் எண்ணம் கடுகளவும் இல்லை.

 

அதனால், பெண்ணின் உச்ச கட்ட இன்பம் என்பது என்ன? அப்போது என்ன தான் நடக்கிறது என்பது, பல ஆண்களுக்குத் தெரியவே தெரியாது. அது தெரியாத காரணத்தால் தான், மனைவியை போகப் பொருளாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

 

ஆணின் பாலுணர்வைத் தூண்டும் காரணிகள்.

 

பாலியல் அறிவு அறவே இல்லையென்றாலும், ஆணுக்குப் பாலுறவு தேவைப் படுகிறது.

 

பாலுறவு உடல் நலத்திற்கு நல்லது. நோய்த்தடுப்பு அரணாக பாலுறவு செயலாற்றுகிறது. மனதை நலமாய் வைத்திருக்க உதவக் கூடியது.

 

அன்பை உருவாக்குவதில் முக்கிய பங்கை வகிக்கக் கூடியது. தம்பதியரிடையே உறவை வலுப்படுத்தக் கூடியது.

 

மனைவியின் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. மனைவியின் மன நலத்திற்கு மிகவும் முக்கியமாகத் தேவைப்படுவது.

 

மனைவியின் மனநலத்தைப் பொறுத்தே கணவனின் மகிழ்ச்சியும், அவன் பெறக்கூடிய வெற்றியின் அளவும், சமூக மதிப்பும், ஆயுட் காலமும், குழந்தை களின் எதிர்காலமும், குடும்பத்தின் தரமும், தீர்மானிக்கப் படுகின்றன. ஆகவே அடிக்கடி பாலுறவில் ஈடுபடுவது இன்றியமையாதது என்பன போன்ற விஞ்ஞான பூர்வ காரணங்களை முன்னிட்டு, ஆணின் உடலிலும், மனதிலும் பாலுறவு வேட்கை உருவாவதில்லை.

 

ஆணின் பாலுறவு வேட்கைக்கான காரணங்களே வேறு.

 

முதற் காரணம் உயிரியல்.

 

வினாடிக்கு ஆயிரக்கணக்கான உயிரணுக்கள் வீதம் ஒரே நாளில் பத்து கோடிக்கும் அதிகமான உயிரணுக்கள் ஆணின் உடலில் உருவாகி, விதைப் பையில் சேர்ந்து விடுகின்றன. இது இயற்கை. ஆகவே, இதைத் தடுக்க எந்த ஆண் மகனாலும் முடியாது.

 

மேலும் அந்த உயிரணுக்களை வெளியேற்றும் படி அவனுக்கு உத்திரவிடுகிற வேதிப்பொருள் வேறு சுரந்து கொண்டேயிருக்கிறது. அந்த உத்திரவிற்குக் கீழ்ப்படியா விட்டால், ஒரு வித பால் அழுத்தம் உடலில் ஏற்பட்டு விடுகிறது. அதனால், மனநிலை ஆவேசமுடையதாக மாறி விடுகிறது.

 

ஆகவே தன்னுடைய உயிரணுக்களை வெளியேற்றியாக வேண்டிய கட்டாயம் ஆணுக்கு ஏற்படுகிறது. இதுவும் இயற்கையாகவே உருவாகின்ற நெருக்கடி தான். இதையும் ஒரு ஆண் பிறவியால் தடுக்க முடியாது.

 

இவற்றோடு, ஒரு பெண்ணை அரை நிர்வாணக் கோலத்தில், கவர்ச்சிகரமாகப் பார்க்க நேரிடும். அடுத்த வினாடியே, ஆணின் மூளையில், பாலுணர்வைத் தூண்டி விடக்கூடிய வேதி சுரக்கத் தொடங்கி விடும். இதுவும் ஒரு இயற்கையான நிகழ்வே. இதையும் யாராலும் தடுக்க முடியாது.

 

ஆணின் உடலில் சுரக்கும் அந்த வேதிக்கு, சட்டங்களைப் பற்றி யெல்லாம் தெரியாது. மேலும், ஒரு யுவதியின் கவர்ச்சிகரமான தோற்றத்தைக் கண்டும் கூட, ஆணின் உடலில் பாலுணர்வை உருவாக்கக் கூடிய வேதி சுரக்கா விட்டால், அவனுடைய உடலை ஏதோ ஒரு நோய் தாக்கியிருக்கிறது என்று பொருள்.

 

அது தவிர, சின்னத்திரை, திரைப்படங்கள், வார, மாத இதழ்கள், காதல் நவீனங்கள், தினசரிப் பத்திரிகைகளில் வரக்கூடிய கள்ளக் காதல் விவகாரங்கள். பெண்ணின் கவர்ச்சிகரமான ஆடைகள் மற்றும் அண்டை அயலில் நடைபெறும் திரை மறைவுக் காரியங்கள் எனப் பல்வேறு தாக்கங்களால், மேற்கண்ட வேதி உடலில் சுரப்பதன் காரணமாக, ஆண் பாலுறவு வேட்கை கொள்கிறான்.

 

மேலும், பாலுறவு என்பது மன அழுத்தத்திற்கான ஒரு மா மருந்து அன்றாடப் பணி சார்ந்த மன வருத்தங்களுக்கான ஒரு வடிகால்.

 

அதனால், பாலின்பத்திற்காக ஏங்கும் மனநிலையிலேயே ஆண் எப்போதும் இருக்கிறான்.

 

அது மட்டுமின்றி, வரலாறு நெடுகிலும், பாலின்பப் பஞ்சம் ஆணின் வாழ்வில் ஏற்பட்டதேயில்லை. விரும்பிய போதெல்லாம் அவன் அனுபவித்துக் கொண்டே இருந்ததால், அவனுடைய மரபணுவிலேயே பாலின்ப ஆர்வம் அழுத்தமாகப் பதிந்து விட்டது. அதனால், அவனுடைய பாலின்ப ஆர்வத்தை அவனுடைய உடலில் வாழும் மரபணு தூண்டி விட்டுக் கொண்டேயிருக்கிறது.

 

இந்தப் பிறவியிலும், திருமணமாகி ஒரு குழந்தை பிறக்கும் வரை, இன்பம் மறுக்கப் பட்டதில்லை. குழந்தை பிறந்த பிறகு தான், மறுத்தல் துவக்க மாகிறது. திருமணமான ஒரு ஆணுக்கு ஏற்படக்கூடிய முதல் அதிர்ச்சி இது.

 

திருமணமாகும் வரை, சுய இன்பம் கை கொடுக்கிறது. ஆனால், மணமாகி பெண்ணைப் புணர்ந்து, முயங்கி எழுந்த பின், ஆணுக்கு சுய இன்பம் சுவைப்பதில்லை.

 

அது தவிர, எது மறுக்கப் படுகிறதோ அதன் மீதான ஆசை அதிக ரிக்கும் என்பது உளவியல் விதி. அந்த விதிப் படி, ஆணுக்குப் பாலுறவு கண்டிப்பாகத் தேவைப் படுகிறது. பாலுறவின்றி வாழ்வது ஆணுக்குக் கடினம்.

 

அப்போது நேரம் இரவு பதினொன்று.

 

குழந்தையின் அணைப்பில் மனைவி அயர்ந்து உறங்கிக் கொண்டி ருக்கிறாள். மெதுவாக எழுப்புகிறான். மனைவியோ தூக்கம் கலைந்த எரிச்சலில் திட்டுகிறாள். அவன் கெஞ்சுகிறான். அவளோ தன் மேல் விழுந்த அவனது கையை வேகமாகத் தட்டி விடுகிறாள்.

 

கணவனுக்கு கோபம் வருகிறது. மிரட்டுகிறான். எனினும் அவள் மசிய வில்லை. இறுதியில் அங்கே ஒரு குடும்ப விவகாரச் சண்டை மூள்கிறது.

 

அந்த சண்டையின் சத்தத்தால் தூக்கம் கலைந்து எழுந்த குழந்தை, எதுவுமே புரியாமல் அழத் தொடங்குகிறது. அதனால் கணவனுக்கு வெற்றி கிட்டவில்லை.

 

கணவனால் உறங்க முடியவில்லை. காமத்தால் உடல் தகிக்கிறது. தவிக்கிறான். தண்ணீர் குடிக்கிறான்.

 

எனினும் மன அழுத்தம் கூடுகிறது. அவனறியாமலே சிந்தனை யோட்டம் நடைபெறத் தொடங்குகிறது.

 

நன்றி கெட்டவள். இவளுக்காக நான் எத்துணை செய்திருக்கிறேன். ஆயினும் தர மறுக்கிறாளே.

 

ஏன் இப்படிப் பிடிவாதமாக மறுக்கிறாள்? வேறு எவனும் இருப்பானோ? ச்சே. எப்படித்தான் இந்த நரக வாழ்க்கையை வாழ்வது? பேசாமல் செத்துப் போய் விடலாமா?

 

எந்த வழியில் தற்கொலை செய்து கொண்டால் வலியில்லாமல் சாக முடியும்? என்றும் இன்ன பிறவாகவும், எண்ணிப் புலம்பிய படியே உறங்கிப் போகிறான்.

 

இத்தகைய மனநிலையோடு கணவன் உறங்கச் செல்வது மிகவும் ஆபத்தானது. ஏனெனில், மனைவியின் மீது காழ்ப்புணர்ச்சியை ஏற்படுத் துவதோடு, அந்தக் கணவனை ஒரு தோல்வியாளனாக உருவாக்கி, அதன் மூலம், குடும்பத்தின் வளமையைக் கூட அழித் தொழிக்கக் கூடிய உளவியல் அபாயம் தணிக்கப் படாத காமத்தோடு உறங்கக் கூடிய உறக்கத்தின் பின்னால்,மறைந்திருக்கிறது.

 

ஆண் மிருகமாகிறான்.

 

சில குடும்பங்களில் நிலைமை வேறு விதமாகவும் இருக்கிறது.

 

கணவன் கேட்கிறான். மனைவி மறுக்கிறாள். பிறகு கெஞ்சுகிறான். மனைவியோ மிஞ்சுகிறாள். அதன் பின் அதட்டிக் கேட்கிறான். அதற்கும் மசியாத போது, கடுமையாக வற்புறுத்தி, பலவந்தமாக ஈடுபட்டு விடுகிறான்.

 

பசியுள்ள மிருகம் வெறியுடன் செயல்பட்டு விடுகிறது. அதனால், குடும்பத்திற்குள்ளே நிகழக்கூடிய பாலியல் வன்முறையொன்று அங்கே அரங்கேறுகிறது.

 

இரவு பதினோரு மணி வாக்கில் அது தொடங்கியது. ஒரிரு நிமிடங்களில் அனைத்தும் முடிந்தும் போயிற்று. ஏனெனில், பெண்ணுக்கு விருப்பமில்லாத நிலையில் பாலுறவில் ஈடு பட்டால், ஆணின் உடலில் துரித ஸ்கலிதம் ஏற்படுவது தவிர்க்க முடியாதது.

 

வற்புறுத்தல் என்பது வன்முறை. மனதின் மீது நடத்தப் படுகிற வன்முறை அது. வன்முறைக்கு ஆளானவரால் நிரூபிக்க முடியாத வன்முறை அது.

 

பாலுறவில் ஈடுபட்டாக வேண்டிய நெருக்கடியை வற்புறுத்தலின் மூலமாக உருவாக்குவது, மிகவும் கோழைத்தனமான ஒரு போர்த் தந்திரம்.

 

யாருக்குமே தெரியாமல் மனைவியின் மீது ஏவப்படும் இத்தகைய உளவியல் சார்ந்த வன்முறை, மனைவியின் மன நிலையை மிகவும் கோரமாகக் காயப் படுத்தும் வல்லமையுடையது. பெண்ணின் உடலை உடனடியாகவும், மனதை மரணம் வரையிலும் பாதிக்கக் கூடியது.

 

வற்புறுத்தலின் மூலமாகப் பாலுறவில் ஈடுபடும் போது, குழாய் வடிவிலான பெண்ணுறுப்பு ஆணுறுப்பை வரவேற்கும் நிலையில் இருப்பதில்லை.

 

அது தன்னளவில் வளைந்தும், நெளிந்தும் சுருங்கிப் போனதாகவும், இறுக்கமடைந்து விடக்கூடியதாகவும், எவ்வித உயவுப் பொருளையும் சுரக்காததாகவும் தன்னை வைத்துக் கொள்கிறது.

 

பெண்ணுறுப்பில் வாழும் கோடிக்கணக்கான உயிரணுக்கள் ஆணுறுப்பை எதிர் கொண்டு தழுவிக் கொள்வதற்குப் பதிலாக, எதிர்த்துப் போரிடுகின்றன. அதனால் பெண்ணுறுப்பில் வறட்சித்தன்மையும், இறுக்கமும் நிலவுகிறது.

 

மேற்கண்ட இறுக்கமான நிலை மற்றும் வறண்ட சூழல் காரணமாக, ஆணுறுப்பின் மீது ஏற்படக்கூடிய உராய்வு அதிகமாக உணரப் படுகிறது. அதனால், ஓரிரு நிமிடங்களிலேயே ஆணுக்குரிய பாலின்பம் நிகழ்ந்து விடுவதோடு,உயிர் நீரும் வெளியேறி விடுகிறது.

 

மேலும், கட்டாயப் படுத்தி, பாலுறவில் ஈடுபடும் போது, ஆணுக்குரிய இன்பம் விரைந்து நிகழ்ந்து தொலையட்டும் என்பதற்காக, பெண் ஒரு ரகசிய வேலையிலும் ஈடுபடுகிறாள். ஒரே நிமிடத்தில் தன் இன்பம் நெருங்கி விட்டதைப் போல,”ஆ.. ஊ..” எனப் பாசாங்கு செய்கிறாள்.

 

அதாவது, தாம்பத்ய வாழ்வில் போகப் பொருளாகப் பயன் படுத்தப் படும் பெண் ஆணின் இன்பத்தைத் சீக்கிரத்தில் நிகழ்த்தும் கலையை ஒரு சில மாதங்களிலேயே கற்று விடுகிறாள்.

 

ஒவ்வொரு பெண்ணும், ஏதேனும் ஒரு கட்டத்தில் இவ்வாறு பாசாங்கு செய்வதாகக் கூறப்படுகிறது.

 

இதைப் பார்க்கும் ஆணுக்கு வேகமாக இன்பம் நிகழ்ந்து, உயிர் நீர் வெளியேறி விடுகிறது.

 

ஆணின் ஆட்டம் சில விநாடிகளில் முடிந்து போக பெண் நடத்தும் இத்தகைய பாசாங்கு வேலையும் ஒரு காரணம்.

 

இவ்வாறாக, போகப் பொருளாக பயன் படுத்தப் படும் போதெல்லாம், ஆணை எவ்வளவு சீக்கிரமாக உச்சிக்குக் கொண்டு வர முடியுமோ, அவ்வளவு சீக்கிரமாகப் பெண் கொண்டு வந்து விடுகிறாள்.

 

இதைப் பார்க்கிற கணவனோ தன்னை ஒரு மகா செயல்வீரன் என்று எண்ணிக் கொள்கிறான். பல குடும்பங்களில் இது நிகழ்வதாக சொல்லப் படுகிறது.

 

ஆய்வுகளின் படி, பெரும்பாலான ஆண்கள் மூன்று நிமிடங்களுக்குள் பெண்ணுக்குரிய இன்பத்தைக் கொடுத்து விடுவதாகக் கூறுகிறார்கள்.

 

இது சாத்தியமற்றது. மூன்று நிமிடமல்ல. பத்து நிமிடங்களில் கூட பெண்ணுக்குரிய உச்ச கட்டப் பாலின்பம் நிகழவே நிகழாது. மிருகத் தனமான, வேகமான பாலுறவால், ஆணுக்குரிய இன்பம் தான் நிகழுமே தவிர, பெண்ணுக்குரிய இன்பம் ஒரு போதும் நிகழாது.

 

ஆனால், இந்தத் தகவல் பெரும்பாலான ஆண்களுக்கு அறவே தெரியாது. அதனால், மனைவிக்குரிய பாலின்பங்களை தவறாமல் வழங்கி விட்டதாய்க் கருதி, அவன் உறங்கி விடுகிறான்.

 

ஆணைப் பொறுத்த வரை பாலுறவென்பது ஒரு தூக்க மாத்திரை. அதாவது ஆணின் உடலில் பாலின்பம் நிகழும் போது மூளையிலே சில வேதிகள் சுரக்கின்றன. அந்த வேதிகளில் ஒன்று ஆழ்ந்த உறக்கத்தை வழங்கக் கூடியது.

 

ஆகவே, பாலின்பம் முடிந்ததும் ஏதோ பெரிய சாம்ராஜ்ஜியத்தையே வென்று விட்டதைப் போன்ற ஆனந்தக் களிப்பில், குறட்டை விட்டு கணவன் உறங்கத் தொடங்கி விடுகிறான்.

 

விரக தாபமும் பெண்ணின் உறக்கமின்மையும்

 

மனைவியின் நிலை தான் இப்போது சிக்கலாகி விட்டது. அவளுடைய நிம்மதியான உறக்கம் பறி போய் விட்டது. இல்லை. பறிக்கப்பட்டு விட்டது.

 

உடல் பலம் கொண்ட ஒரு உயிரினமொன்று, தான் உறங்குவதற்காக உடல் பலம் குறைந்த ஒரு உயிரின் உறக்கத்தைப் பறித்துக் கொண்டது.

 

இது ஒரு கொள்ளை. ஆனால், நிரூபிக்க முடியாத ஒரு கொள்ளை.

 

பெண்ணின் உடலில் பதுங்கிக் கிடந்த காம உணர்வுகளைத் தூண்டி விட்டதோடு, அவளது உறக்கத்தையும் கெடுத்த கணவன் உறங்கத் தொடங்கி விட்டான். இந்தக் கொடுமைக்கு ஆளான மனைவி, இப்போது உறக்கமின்றித் தவித்த படியே, கணவனச் சபிக்கத் தொடங்குகிறாள்.

 

சுயநலப் புலி.உறக்கத்தைப் பறித்துக் கொண்ட துரோகி . இவனைக் கட்டி நான் என்ன சுகம் கண்டேன்? எதுவுமே தெரியாத இந்த மூடனோடு எப்படித்தான் காலமெல்லாம் வாழ்வது?

 

குழந்தை வேறு பிறந்து விட்டதே! இவனை விட்டுத் தொலைக்கவும் முடியாதே! இவனுக்குக் கட்டி வைத்து என் வாழ்க்கையை நாசம் செய்து விட்டார்களே என் பெற்றோர்!

 

இவனெல்லாம் எதற்காகத் திருமணம் செய்து கொள்கிறான்?

 

சுகம் அளிக்கத் தெரியாத இவனெல்லாம் எவ்வளவு தான் சம்பாதித்து என்ன பயன்? யாருக்கு வேண்டும் பணம்? என்னிடம் இல்லாத பணமா?

 

குறட்டை விட்டு உறங்குவதைப் பார். இவனை அப்படியே கழுத்தைப் பிடித்து திருகி விட்டால் என்ன? என்றும் இன்ன பிறவாகவும் கணவனைச் சபித்த படியே பின்னிரவில், தன்னையறியாமல் வந்த உறக்கத்திலே, உறங்கிப் போகிறாள்.

 

தனக்குரிய இன்பத்தை வழங்காத பாலுறவிற்குப் பின், கணவனின் மீது மனைவியின் மனதில் கோபம் உருவாவது தவிர்க்க முடியாதது.

 

அதோடு, அவளுக்கு விருப்பமற்ற நிலையில், ஒரு போகப் பொருளாகவும்  பயன்படுத்தப் பட்டு, உறங்க முடியாமல் அவள் தவிக்க நேரும் போது கணவனின் மீது கடுமையான வெறுப்பு நிறைந்த சிந்தனை உருவாவதும் தவிர்க்க முடியாதது.

 

மேற்கண்ட விரக தாபத்தோடு கூடிய கோபத்துடன், மனைவி உறங்கச் செல்வது கணவனின் மீது நிரந்தரமான காழ்ப்புணர்ச்சியை உருவாக்கக் கூடியது.

 

வாழும் காலம் முழுவதும், கணவனின் நிம்மதியைத் தொடர்ச்சியாக அழித்துக் கொண்டேயிருக்கக் கூடியது.

 

கணவனை மட்டுமன்றி, குழந்தைகள், உறவுகள், சுற்றுப்புறம் என சாத்தியப்பட்ட தொடர்புகள் அனைத்தையும் மோசமாகப் பாதிக்கக் கூடியது.

 

குடும்ப நலத்திற்கு மிகவும் ஆபத்தானது.

 

ஒற்றைக் கருத்தாகச் சொல்வதென்றால், ஒரு அப்பாவிப் பெண்ணைக் கூட அடங்காப் பிடாரியாக மாற்றக் கூடிய ஆபத்து, சீண்டி விடப் பட்ட பின், தணிக்கப் படாத காமத்தோடு உறங்கச் செல்லும் மனைவியின் உறக்கத்தின் பின்னால் மறைந்திருக்கிறது.

 

அதாவது, நாக பாம்பை அடித்தால் பாதி உயிருடன் அதை விட்டு விடக் கூடாது. தவறி விட்டு விட்டால், அடிபட்ட நாகம் அடையாளம் வைத்திருந்து அடித்தவனைப் பழியெடுத்து விடும் என்று பாம்பைப் பற்றி ஒரு கருத்தைச் சொல்வார்கள். பாம்பைப் பொறுத்தவரை, இது முற்றிலும் தவறான கருத்து.

 

ஆனால், மனைவியின் உறக்கத்தைக் கெடுத்து, அடங்கிக் கிடந்த அவளுடைய விரக தாபத்தையும் தூண்டி விட்டு விட்டு, அதைத் தணித்து அவளை உறங்க வைக்காமலே, போகப் பொருளாகப் பயன் படுத்திய பின், அவளுக்கு அருகில் படுத்து ஆனந்தமாகக் குறட்டை விட்டு உறங்கத் தொடங்கும் கணவனை, தணிக்கப் படாத மனைவியின் காமம் தன்னுணர்வற்ற நிலையிலே, பல்வேறு வழிகளில் பழியெடுக்கத் தொடங்கி விடும்.

 

இரத்தத்தை உடலெங்கும் அனுப்புவதற்காக இதயம் தன்னிச்சை யாகத் துடித்துக் கொண்டிருப்பதைப் போல, கல்லீரலும், சிறுநீரகமும் தன்னிச்சையாக இரத்தத்தைச் சுத்திகரித்துக் கொண்டிருப்பதைப்போல, பெண்ணுக்கே தெரியாமல் நடக்கக் கூடிய, – தன்னுணர்வோடு கட்டுப் படுத்தப் பட முடியாத – நிகழ்வுகளில் ஒன்றாக, அந்தப் பழியெடுக்கும் செயல், வாழ் நாள் முழுவதும் பல்வேறு வடிவங்களில் நடந்து கொண்டிருக்கும்.

 

மனைவியை போகப் பொருளாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கும் ஒவ்வொரு ஆணுக்கும், அதற்குரிய தண்டனை, நிச்சயமாக மனைவியால் வழங்கப்படும். உடனடியாக வழங்கப்படுமா அல்லதுமுதுமைக் காலத்தில் வழங்கப் படுமா என்பது மட்டுமே, ஒரே கேள்வி. இது ஒரு பேருண்மை. இந்தப் பேருண்மையை விஞ்ஞான பூர்வமாக நிரூபிக்க முடியும்.

 

0% Complete