fbpx

90s Kids Kamasutra

Categories: Online Reading Books
Wishlist Share
Share Course
Page Link
Share On Social Media

About Course

நன்மைகள்

 

வாழ்க்கை ஒரு பரிசு. யாருக்குமே இரண்டாவது முறை இது வழங்கப் படுவதில்லை. ஆகவே, அதைக் கொண்டாடத் துவங்குங்கள்.

 

ஆனால், காமத்தைப் புறக்கணித்து விட்டு கொண்டாட்டம் சாத்தியமில்லை. ஏனெனில், பிறப்பு மட்டுமின்றி ஒவ்வொரு நபருடைய இல்லற வாழ்வும் கூட காமத்திலிருந்து தான் தொடங்கப் படுகிறது. பிறப்பு, இல்லறம், வாழ்வின் சாதனைகள், மரண நாள் என அனைத்தும் காமம் சார்ந்ததே.

 

ஆகவே, காமம் குறித்த கபட வேடத்தைக் களைந்தெறிவோம். இயற்கையைப் பேணுவதில் இரட்டை வேடங்கள் தேவையில்லை என்பதைப் புரிந்து கொள்வோம். தம்பதியர் இருவரும் ஒருவர் மற்றவருடைய இயற்கைத் தேவையான காமத்தைத் தணித்து வாழக் கற்றுக் கொள்வோம். கற்றுக் கொண்டவற்றை வெட்கமின்றிக் கடைப் பிடிப்போம்.

 

முறையான தளத்திற்குள் பரஸ்பரம் காமத்தைத் தணித்துக் கொள்வது வெட்கப் படுவதற்குரிய காரியமென்றால், பிரசவம் கூட வெட்கப்படத் தக்க செயலே. ஆகவே, காமத்தை எதிர்த்தால், கீழ்த்தரமாகக் கருதினால், பிரசவத்தைக் கைவிட வேண்டும்.

 

அதைக் கைவிட முடிவெடுக்கும் நாளில் மனித குலம் பட்டுப் போய் விடும். குல அழிவை மனிதனே முன்னின்று மேற்கொண்டாலும் இயற்கை ஏற்றுக் கொள்ளாது. இயற்கையை மீறிய சக்தி எதுவும் இங்கே இல்லை.

 

காமம் வாழ்வின் நாதம். அந்நாத ஒலி இனிய இசையாய் இருக்கலாம். நாராசமாகவும் ஒலிக்கலாம். இது மீட்டுபவருடைய அறிவின் ஆழத்தைப் பொறுத்தது. அதற்குரிய விசாலமான அறிவை வழங்குவதே நூலின் நோக்கம்.

 

நிம்மதியாக வாழ விரும்பும் குடும்பத்திற்கான ஒரு ஆலோசனைக் கையேடாக, வெற்றிகரமான குடும்ப வாழ்க்கைக்கான ஒரு பேராயுதமாக, குடும்ப நிம்மதியைக் கொல்ல வரும் எந்தவொரு இரகசிய எதிரியையும் முன்கூட்டியே இனம் கண்டு அழித்தொழிக்கும் வல்லமையுடைய ஆயுதமாக இந்நூல் நிச்சயமாகச் செயலாற்றும்.

 

மேலும் இந்த நூல் பகிர்ந்து கொள்ளும் சம கால உதாரணங்களைத் தவிர, மற்றவையனைத்தும் புராதனமானவை. பண்டைய தமிழ் ஞானிகளால் மனித சமூகத்திற்கு வழங்கப்பட்டவை. ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னால் வரை தமிழ் மக்களால் பின்பற்றப்பட்டவை. அன்னியர்களுடைய ஆதிக்கம் காரணமாகக் கைவிடப் பட்டவை. காலத்தின் தேவையால் மீண்டும் உயிர் பெற்று எழுந்திருப்பவை.

 

அந்த ஞானப் புதையல்களில் ஒன்று தான் தந்த்ரா! கலாச்சார ரீதியாகப் பெரும் மாற்றம் நிகழ்ந்து கொண்டிருக்கும் கால கட்டத்தில் வாழ நேர்ந்துள்ள ஆணுக்கு அவசியமாகத் தேவைப் படுகின்ற ஞானம் தந்த்ரா! அந்த ஞானத்தைக் கற்காத ஆண்களால் இனிமேல் குடும்ப வாழ்க்கையை நிம்மதியாக வாழ முடியாது.

 

ஆகவே காமம் குறித்து இதுவரை ஊட்டப் பட்டுள்ள கருத்துக்கள் அனைத்தையும் சற்றே ஒதுக்கி வைத்து விட்டு படிக்கத் துவங்கினால், ஒவ்வொரு கணவனையும் அசாதாரணமான காதலனாக உண்மையான, சுயநலமற்ற தவறாமல் மனைவிக்குரிய இன்பத்தை அளிக்கின்ற வெற்றிகரமான கணவனாக இந்த நூல் மாற்றியமைக்கும்.

 

ஒரு குடும்பம் அமைவதும், அமைந்த குடும்பம் வாழ்வதும், வீழ்வதும், உயர்வதும், தாழ்வதும் பெண்ணின் கையில் தான் இருக்கிறது என்பதை ஒவ்வொரு ஆணும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

 

ஆண் என்பவன் புயல். மகா சக்தி மிக்கவன். பெண் என்பவள் புயலின் மையம். ஆணைப் போன்ற சக்தி இல்லாமல் இருக்கலாம். இயற்கையான உபாதைகள் சில இருக்கலாம். ஆனால், மையம் தான் புயலை வழி நடத்தும் சக்தி.

 

மனநிலை தான் வெற்றிகளின் மூலம். அந்த மன நிலையை உருவாக்குபவள் பெண். ஆகவே, பெண்ணின் மனநிலை ஆரோக்கிய மானதாக இருக்க வேண்டும். மனநிலையைக் கெடுப்பதில் முதலிடம் வகிப்பது தணிக்கப் படாத காமம். ஆகவே, பெண்ணின் காமம் தணிக்கப் பட வேண்டும்.

 

பெண்ணின் முதற் தேவையான உடற் தேவை பூர்த்தி செய்யப் பட வேண்டும். பெண்ணைப் போகப் பொருளாகப் பயன்படுத்தக் கூடாது. அது தான் குடும்ப அமைப்பைக் காப்பாற்ற உதவும். அந்நிலையை உருவாக்க வேண்டும் என்பதே இந்த நூலின் தலையாய நோக்கம்.

 

இதோ இனி அந்த ஞானப் பெருங்கடலில் மூழ்கி முத்தெடுக்கத் துவங்குங்கள். கடலிலிருந்து கரையேறும் போது, ஒவ்வொருவரும் அவரவர்க்கு வேண்டிய அளவிற்கு முத்தெடுத்து விடுவீர்கள் என்பதில் கடுகளவல்ல, அணுவளவு கூட எனக்கு ஐயம் இல்லை.

 

மனைவியை ஒரு போகப் பொருளாகப் பயன்படுத்தாமல், ஈடுபடும் ஒவ்வொரு முறையும் உரிய இன்பங்களை வழங்கி, மகிழ்ந்து குலாவிக் கொண்டாடி மகிழ, என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

 

அனைத்து வெற்றிக்கும் ஆனந்தமே அடிப்படை. வெற்றியே வாழ்வின் இலட்சியம். பேரானந்தம் நம் பிறப்புரிமை. அது எங்கோ வெகு தொலைவில் இல்லை. இல்லற வாழ்க்கைக்குள் தான் இருக்கிறது. அதைப் பெற்று ஆனந்தமாக வாழ்ந்து கொண்டிருப்போமாக!

 

அவரவர்க்கு அமைந்த இல்லற இணையை இன்புறுத்தி மகிழ்வித்து தேவதையாய் உணரச் செய்து, வாழக் கிடைத்த இல்லற வாழ்வை ஆனந்தமாய்க் கொண்டாடிக்களித்து, நீண்ட காலம் நிம்மதியாய் வாழ்ந்து மகிழ்ந்திட, என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

 

👨‍👩‍👦 இந்த புத்தகத்தை வாங்கிப் படித்த பலரின் கருத்து

 

📌என் மனைவி இப்பொழுது மகிழ்ச்சியாக இருக்கிறாள். என்னை மரியாதையுடன் நடத்துகிறாள், எதிலும் குறை சொல்வதில்லை. எங்கள் குடும்பத்தில் சண்டை என்ற பேச்சுக்கே இடமில்லை. நாங்கள் மகிழ்ச்சியாக வாழ்கிறோம். இந்த நூலின் ஆசிரியருக்கு கோடி நன்றிகள்.

 

📌நாங்கள் காதலித்துதான் திருமணம் செய்தோம். ஆனால் திருமணமாகி குழந்தை பிறந்ததற்கு பின் இருவருக்கும் இடையேல் ஓயாத சண்டை. எதிலும் சந்தேகம் ஒருவரை ஒருவர் திட்டியே எங்கள் வாழ்கை சென்றது. இந்த நூலை படித்ததன் பின் எங்கள் ஈகோ மறைந்து விட்டது. நாங்கள் காதலிக்கும் போது இருந்ததை விட இப்போதுதான் சந்தோசமாக வாழ்கிறோம். இந்த நூலை அனைத்து ஆண்களுக்கும் நான் பரிந்துரை செய்கிறேன்.

 

📌இந்த புத்தகம் 20 வருடங்களுக்கு முன் கிடைத்திருந்தால் இன்னும் என்வாழ்கை அற்புதமாக மாறியிருக்கும். கணவன் மனைவி இருவரும் ஒன்றாக இருந்து படியுங்கள் இன்னும் நல்ல புரிதல் ஏற்படும். மற்றும் நான் இரண்டு பெண் பிள்ளைகளின் தாய். நூலாசிரியரின் மற்ற நூலான *2k Kids காதல் அறிவியல்* என்கிற நூலை பதின் பருவ 11,12,13,14,15,16,17,18,19 வயது பெண் பிள்ளைகளின் பெற்றோர்கள் கண்டிப்பாக படிக்க வேண்டுகிறேன். காதலைப்பற்றி இவ்வளவு தெளிவாக யாரும் சொல்லவில்லை. நூலின் ஆசிரியருக்கு நன்றிகள்.

 

📌மிகவும் அற்புதமான நூல். எனக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது ஆரம்பத்தில் இந்த நூலை வாங்குவதற்கு கூச்சமாக இருந்தது, வீட்டில் யாராவது பார்த்தால் என்ன நினைப்பார்கள் எண்டு. ஆனால் இணையதளத்தில் படிக்கலாம் என்றவுடன் தயங்காமல் வாங்கிவிட்டேன். எனக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண்ணுடன் விரும்பிய இடத்தில் இருந்து விரும்பிய நேரத்தில் ஒன்லைன் இல் படிப்பது இலகுவாக இருக்கிறது. இப்படி ஒரு இணையதள வசதியை செய்து தந்த நுலாசிரியருக்கு நன்றிகள்.

 

இவ்வாறு 100+ இன்னும் பலர் நன்றாக அவர்களின் கருத்தை எங்களுக்கு அனுப்புகிறார்கள். நூலை படித்துவிட்டு உங்களது அனுபவங்களை எங்களுக்கு அனுப்புங்கள்.

 

Our WhatsApp Number +94 75 24 24 264

Show More

What Will You Learn?

  • பாலின்பமும் உடலில் சுரக்கும் வேதிகளும்
  • ஆணின் ஆற்றலும், பெண்ணின் இயல்பும்
  • பால் மண்டலத்தை வலுப்படுத்தும் பயிற்சிகள்
  • விந்தை வெளியேற்றாமலே இன்பத்தை நிகழ்த்தும் பயிற்சி
  • பாலின்ப உச்ச கட்டப் பரவசம்
  • பெண்ணின் பாலுறுப்பு
  • ஆணின் பாலுறுப்பு
  • காதல் விளையாட்டுக்கள்
  • காதல் விளையாட்டுக்களில் நாவின் பங்கு
  • மதன பீட பூஜை
  • பிரம்மஸ்தான பூஜை
  • புனிதப் புள்ளியில் பூஜை
  • அமிர்த பூஜை
  • புனிதப் புள்ளியில் அடுத்தொரு பூஜை
  • தந்த்ரா பூஜை
  • அதிர்வின்ப பூஜை
  • நறுமணத் தோட்டத்துப் பூஜை
  • பேரரசர்களின் அசாத்திய பூஜை

Course Content

பாகம் – 1 குடும்பமும், குடும்ப விவகாரச் சண்டைகளும்

பாகம் -2 காம உணர்வைக் கொல்லும் கயவர்கள்

பாகம் -3 பாலின்பத்தின் ஆற்றல்

பாகம் – 4 தாம்பத்ய இரகசியங்கள்

பாகம் – 5 தந்த்ரா வழங்கும் பேரின்பங்கள்