About Lesson
பேருண்மைகள்
- கேள்வி : ஒரு மனைவி தன்னோடு தொடர்புடைய ஒன்றை, உலகில் உள்ள அனைத்து ஆண்களுக்கும் காட்டுவாள். ஆனால் கணவனுக்கு மட்டும் ஒரு போதும் காட்ட மாட்டாள் அது என்ன?
- கேள்வி : ஒரு குழந்தை தன்னிடம்முள்ள ஒரு திறமையை அனைவருக்கும் காட்டும். ஆனால், தன் பெற்றோருக்கு மட்டும் காட்டவே காட்டாது. அது என்ன?
- கேள்வி : தங்கள் குழந்தையைப் பற்றி எதைச் சொன்னாலும் பெற்றோர் நம்புவார்கள். ஆனால், ஒரு தகவலை மட்டும் நம்பவே மாட்டார்கள். அது என்ன?
- கேள்வி : அனைத்து நூல்களையும் ஆண்கள் படிப்பார்கள். ஆனால், ஒரே ஒரு நூலை மட்டும், பெரும்பாலான ஆண்கள் படிக்கவே மாட்டார்கள். அது என்ன நூல்?
- கேள்வி : கடவுளால் கூட தூக்கிச் செல்ல முடியாத அளவுக்கு மனிதரிடம் நிரம்பிக் கிடக்கின்ற, ஆனால் கடவுளிடம் கடுகளவு கூட இல்லாத ஒரு சொத்து எது?
பதில்
- விதவைக் கோலம்.
- காதலிக்கும் திறமை.
- குழந்தையின் காதலைப் பற்றிச் சொன்னால் எந்தப் பெற்றோரும் நம்ப மாட்டார்கள்.
- கணவன் மனைவி சண்டையை இல்லற வாழ்விலிருந்து அடியோடு விரட்டியடிக்கும் சக்தி படைத்த, மனைவியைத் தேவதையைப் போல் வைத்திருப்பது எப்படி என்று கற்றுத் தருகின்ற, பண்டைய தமிழர்களின் ஞானமான “தந்த்ரா இரகசியங்கள்” என்கிற நூலை மட்டும் பெரும்பாலான ஆண்கள் படிக்க மாட்டார்கள்.
- அறியாமை.