ஒரு தீபம் வேறொரு தீபத்தை இங்கே ஒளிர வைக்கிறது. அந்த வேறொரு தீபம் இனியொரு தீபத்தை ஒளிர வைக்கும் என்கிற உறுதியான நம்பிக்கையோடு.
எது காதல்?
எது காமம்?
எது மோகம்?
எது போலிக்காதல்?
எது இனக்கவர்ச்சி?
ஏன் தற்கொலைகள்?
பள்ளிக்கோ, கல்லூரிக்கோ பணிக்கோ செல்லும் குழந்தைகள் இவற்றில் சிக்கித் திசை மாறிப் போய், பெற்றோருக்கே எதிரிகளாக மாறி விடாதவாறு, கவனமாகக் குழந்தையை வளர்ப்பது எப்படி?
மாணவ மாணவியரின் தற்கொலைக்கான காரணங்கள், தற்கொலைக்கு முந்தைய அறிகுறிகள் மற்றும் தற்கொலையைத் தடுக்கும் உத்திகள்.
பதிப்பாசிரியர் : தி. சஜந்தன் பதிப்புரிமை : பதிப்பாசிரியருக்கு வெளியீடு : நற்பவி டிஜிட்டல் பப்ளிஷர்ஸ் Website : natpavi.com Email : natpavibookshop@gmail.com பக்கங்கள் : 340 விலை : Rs.2499/-
இந்த நூலிலிருந்து எந்தவொரு பகுதியையும், ஆசிரியரின் எழுத்து பூர்வ சம்மதமின்றி நகல் எடுத்தலோ, அச்சடித்தலோ, பகுதி வாரியாகத் துண்டு பிரசுரங்களாகப் பிரசுரித்தலோ, பதிப்புரிமைச் சட்டத்தின் படி தடை செய்யப்பட்டுள்ளது.
போலிக் காதலில் சிக்கிக் கொள்ளாத புத்திசாலியாக, குழந்தையை வளர்ப்பது எப்படி?
குழந்தைகளின் கவனத்தைச் சிதறடித்துக் காதலில் விழ்த்தும் உயிரியல் காரணிகள் எவை?
உளவியல் காரணிகள் எவை?
சமூகக் காரணிகள் எவை?
தற்கொலைக்கான காரணங்கள் எவை?
அவற்றின் தாக்கத்திலிருந்து நம் குழந்தைகளைக் காப்பது எப்படி?
சமர்ப்பணம்
தங்கள் குழந்தையை வெற்றியாளராய் உருவாக்க விரும்பும் ஒவ்வொரு பெற்றோருக்கும்.
மற்றும்
பதினாறு, பதினேழு, பதினெட்டு, பத்தொன்பது வயதுகளில் வாழும் பதின் பருவக் குழந்தைகளின் பெற்றோருக்கும்.
பிறரை விடப் பெற்றோரையே சிறந்த வழிகாட்டியாய்க் கருதுகின்ற ஒவ்வொரு குழந்தைக்கும்.