ஒரு உயர் நிலைப் பள்ளியில், பத்தாம் வகுப்பின் வகுப்பாசிரியை, தலைமையாசிரியரைச் சந்தித்து, ஒரு அதிர்ச்சிகரமான தகவல்களைத் தெரிவிக்கிறார். என் வகுப்பில் பயிலும் குறிப்பிட்ட நான்கு மாணவிகளைப் பார்த்தால், சந்தேகமாக இருக்கிறது. அவர்கள் நால்வரும் கர்ப்பமாக இருக்க கூடும் என்று நான் ஐயுறுகிறேன்.
உடலில் மிளிர்ச்சி அவ்வாறு உள்ளது. என் கணிப்பு உண்மையாகவும் இருக்கலாம். தவறாகவும் இருக்கலாம். கணிப்பு தவறாக இருந்து விட்டால் மகிழ்ச்சி. ஆனால், சரியாக இருந்து விட்டால் நாம் என்ன செய்வது?
“பத்தாம் வகுப்பு மாணவிகள் கர்ப்பம்” என்கிற தகவல் வெளியில் தெரிந்தால், பள்ளியின் பெயர் கெட்டுப் போகும். அதோடு, வகுப்பாசிரியை என்கிற முறையில் நானும், தலைமையாசிரியர் என்கிற முறையில் நீங்களும் பாதிக்கப் படுவோம். ஆகவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நாம் ஏதாவது செய்தாக வேண்டும்.
காதல் விவகாரத்தைப் பொருத்த வரை, ஒரு பெண்ணால் ஆயிரம் ஆண்களை ஏமாற்ற முடியும். ஆனால், தண்னையொத்த ஒரு பெண்ணை ஏமாற்ற முடியாது. தலைமை ஆசிரியருக்கு இது தெரியும். அதனால், எதேட்சையாக வருவது போல், வகுப்புக்கு வந்து, மாணவிகளைப் பார்த்தார். அவர்களுக்கும் ஐயம் ஏற்பட்டது. மாணவிகளைத் தனியாக அழைத்து விசாரிக்கலாம். ஆனால், கணிப்பு தவறாகி விட்டால், அந்த மாணவிகளின் பெற்றோர் படை திரட்டிக் கொண்டு வந்து விடுவார்கள்.
பதினைந்து வயதே ஆன குழந்தைகளிடம் கர்ப்பமாக இருக்கிறாயா என்று எவ்வாறு விசாரிக்கலாம்? நாங்கள் அப்படிப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்களா? என்று சண்டைக்கு வந்து விடுவார்கள்.
ஒருக்கால், கணிப்பு சரியாகவே இருந்து விட்டாலும், ஆசிரியர்களுக்குத் தெரிந்து விட்டதே என்று பயந்து, பள்ளி விட்டவுடன் வீட்டுக்குச் சென்று, மாணவிகள் தற்கொலை செய்து கொள்ளக் கூடும்.
அதனாலும், ஆசிரியர்களுக்கு ஆபத்து. ஏனெனில், பிரேதப் பரிசோதனையில் கர்ப்பம் பற்றிய தகவல்கள் தெரிந்து விடும். அதனாலும் பள்ளியின் பெயர் நாசமாவதோடு, மாணவிகளின் கர்ப்பத்துக்குக் காரணமே ஆசிரியர்கள் தான் என்கிற கருத்தை யாராவது உருவாக்கி விடலாம்.
ஆகவே, உணர்ச்சிகரமான பிரச்சினையாக உருவாகும் திறன் கொண்ட இந்தச் சூழலைக் கையாள்வது எப்படி என்று உளவியல் அறிஞர்களிடம் ஆலோசனை பெற்று, அதன் படி செயல்படுகிறார்கள்.
இது 2k Kids காதல் அறிவியல் எனும் புத்தகத்தில் இருந்து ஒரு பகுதி இந்த நூலை முழுதாய் படிக்க விரும்பினால்.

இலங்கையின் குடும்ப அமைப்பு சிதையத் தொடங்கியிருக்கிறது. திருமணங்கள் அதிவேகமாய்த் தகர்க்கப்படுகின்றன. குடும்ப நீதிமன்றங்களின் எண்ணிக்கையை நான்கு மடங்காக அரசாங்கம் அதிகரித்திருக்கிறது. காரணம் காதல்.
மன்னிக்கவும். இனக் கவர்ச்சியால் நிகழும் களியாட்டங்களும், அந்தக் களிகளைக் காதலெனக் கருதி, நடத்தப்படும் திருமணங்களும் தான், குடும்ப அமைப்பைச் சிதைத்துக் கொண்டிருக்கின்றன.
✅பள்ளிக்கோ, கல்லூரிக்கோ பணிக்கோ செல்லும் குழந்தைகள் இவற்றில் சிக்கித் திசை மாறிப் போய், பெற்றோருக்கே எதிரிகளாக மாறி விடாதவாறு, கவனமாகக் குழந்தையை வளர்ப்பது எப்படி?
✅குழந்தைகளின் கவனத்தைச் சிதறடித்துக் காதலில் விழ்த்தும் உயிரியல் காரணிகள் எவை?
✅உளவியல் காரணிகள் எவை?
✅சமூகக் காரணிகள் எவை?
✅மாணவ மாணவியரின் தற்கொலைக்கான காரணங்கள் எவை?
✅தற்கொலைக்கு முந்தைய அறிகுறிகள் எவை?
✅மற்றும் தற்கொலையைத் தடுக்கும் உத்திகள் எவை?
✅அவற்றின் தாக்கத்திலிருந்து நம் குழந்தைகளைக் காப்பது எப்படி?
என்பதை அறிவியல் பூர்வமாய் பகுப்பாயும் நூல். விரும்பியவர்கள் வாங்கிப் படியுங்கள் நன்றி.
